ADVERTISEMENT

அபுதாபி: பயணிகளின் வசதிக்காக முசாஃபா ஷாபியாவில் புதிய ‘சிட்டி செக்-இன்’ சேவை திறப்பு..!! கட்டண விபரங்கள் அனைத்தும் உள்ளே..!!

Published: 1 May 2024, 8:00 PM |
Updated: 1 May 2024, 8:01 PM |
Posted By: Menaka

அபுதாபியில் செயல்பட்டு வரும் சையத் சர்வதேச விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக முசாஃபா ஷாபியா பகுதியில் புதிய சிட்டி செக்-இன் சேவை திறக்கப்பட்டுள்ளது. முன்னதாக, யாஸ் மாலில் பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது முசாஃபா ஷாபியாவிலும் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

முசாஃபாவின் ஷாபியா-11 இல் இந்த ஆண்டில் இரண்டாவதாக திறக்கப்பட்டுள்ள மொராபிக் (Morafiq) செக்-இன் வசதியை எதிஹாட் ஏர்வேஸ், ஏர் அரேபியா, விஸ் ஏர் மற்றும் எகிப்து ஏர் போன்ற விமான நிறுவனங்களின் விமானங்களில் பயணிக்கும் வாடிக்கையாளர்கள் அணுகலாம் என கூறப்பட்டுள்ளது.

எனவே, முசாஃபா பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் சிட்டி செக்-இன் சேவையைப் பயன்படுத்த இனி யாஸ் மால் அல்லது சையத் போர்ட்டுக்கு செல்ல வேண்டியதில்லை, அவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள செக்-இன் சேவையைப் பயன்படுத்துவதன் மூலம், தடையற்ற மற்றும் வசதியான பயண அனுபவத்தைப் பெறலாம்.

ADVERTISEMENT

இது குறித்து பேக்கேஜ் டெலிவரி மற்றும் செக்-இன் சேவை நிறுவனமான ‘Morafiq’ வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகள் விமானம் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முதல் 4 மணி நேரத்திற்கு முன்பு வரை தங்கள் லக்கேஜ்களை இறக்கிவிட்டு, அவர்களின் வசதிக்கேற்ப போர்டிங் பாஸைப் பெறலாம், இனி விமான நிலையத்தில் செக்-இன் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

முசாஃபாவில் உள்ள புதிய செக்-இன் சேவை எதிஹாட் ஏர்போர்ட் சர்வீசஸ், அபுதாபி ஏர்போர்ட்ஸ் மற்றும் OACIS மிடில் ஈஸ்ட் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டாண்மையின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் வெளிவந்துள்ள தகவல்களின் படி, செக்-இன் சேவை தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்பது தெரிய வந்துள்ளது.

செக்-இன் கட்டணங்கள்

  • 12 முதல் 35 வயதான பயணிகள் – ஒரு நபருக்கு 35 திர்ஹம்ஸ்
  • 12 வயது மற்றும் அதற்குக் குறைவான குழந்தைகள் – ஒரு குழந்தைக்கு 25 திர்ஹம்ஸ்
  • 2 வயது மற்றும் அதற்குக் குறைவான குழந்தைகள்- ஒரு குழந்தைக்கு 15 திர்ஹம்ஸ்

கூடுதல் விபரங்களுக்கு பயணிகள் 971 800 667 2347 என்ற எண்ணில் 24 மணி நேர கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

சிட்டி செக்-இன் அமைந்துள்ள இடம்:

அல் அர்சாக் தெரு, முசாஃபா ஷபியா – 11 (அல் மதீனா ஹைப்பர் மார்க்கெட் பின்புறம்)

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel