ADVERTISEMENT

UAE: இந்த வாரத்துடன் முடியவிருக்கும் குளோபல் வில்லேஜ் சீசன்.. செயல்படும் நேரம் நீட்டிப்பு..!!

Published: 3 May 2024, 1:11 PM |
Updated: 3 May 2024, 1:13 PM |
Posted By: Menaka

துபாயின் மிகவும் பிரபலமான பன்முகக் கலாச்சார குடும்ப-நட்பு இலக்கான குளோபல் வில்லேஜின் 28வது சீசன் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ளது, இந்நிலையில், குளோபல் வில்லேஜ்ஜின் செயல்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக குளோபல் வில்லேஜ் நிர்வாகம் நேற்று வியாழக்கிழமை (மே 2) வெளியிட்ட அறிவிப்பில், எதிர்வரும் மே 5ஆம் தேதியுடன் இந்த சீசன் முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், பூங்கா அதன் கடைசி மூன்று நாட்களுக்கு, மாலை 4 மணி முதல் அதிகாலை 2 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, குளோபல் வில்லேஜின் 28வது சீசன் ஏப்ரல் 28 அன்று முடிவடைய இருந்தது, ஆனால் அமீரகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தின் போது பெய்த கனமழையினால் குளோபல் வில்லேஜ் தற்காலிகமாக மூடப்பட்டது. அதன் காரணமாக, இந்த ஆண்டின் சீசனை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டது.

ADVERTISEMENT

தற்போதைய சீசனில், குளோபல் வில்லேஜில் ‘Value’ மற்றும் ‘Any Day’ என இரண்டு வகையான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ‘வேல்யூ’ வகை டிக்கெட் ஞாயிறு முதல் வியாழன் வரை செல்லுபடியாகும் மற்றும் ‘எனி டே’ டிக்கெட்டுகள் மூலம் வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தின் எந்த நாளிலும் இந்த பூங்காவை பார்வையிடலாம்.

ஒரு ‘வேல்யூ’ வகை டிக்கெட்டின் விலை 22.50 திர்ஹம்ஸ் ஆகும். அதேபோன்று ‘எனி டே’ டிக்கெட் ஒன்றின் விலை 27 திர்ஹம்ஸ் ஆகும். அத்துடன் கோடைகாலத்தை முன்னிட்டு இன்னும் இரு நாட்களில் மூடப்படவிருக்கும் குளோபல் வில்லேஜ் தனது அடுத்த சீசனை இந்த ஆண்டின் இறுதியில், அதாவது அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel