ADVERTISEMENT

டிரைவிங் லைசென்ஸ் பெற லஞ்சம் கொடுத்த வெளிநாட்டினர்..!! 4 வருட சிறை தண்டனையுடன் நாடு கடத்த உத்தரவிட்ட குவைத்….

Published: 13 May 2024, 1:39 PM |
Updated: 13 May 2024, 1:47 PM |
Posted By: Menaka

குவைத்தில் லஞ்சம் பெற்றுக் கொண்டு தகுதியில்லாத 8 வெளிநாட்டவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கிய குற்றத்திற்காக காவல்துறை உயர் அதிகாரிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இதே வழக்கில் சட்டவிரோதமாக ஓட்டுநர் உரிமம் பெற்ற 8 வெளிநாட்டவர்களுக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் தண்டனை காலம் முடிவடைந்த பின்னர் அவர்களை நாடு கடத்தவும் குவைத்தின் கசேஷன் நீதிமன்றம் (Court of Cassation) உத்தரவிட்டுள்ளது.

மேலும் குவைத்தின் உள்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் அதிகாரி மீது, தகுதியற்ற வெளிநாட்டவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கியதற்காக லஞ்சம் வாங்குதல், பொதுப் பணத்தை பறிமுதல் செய்தல் மற்றும் வேலை கடமைகளை மீறுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக, இதே வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், அதிகாரிக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 8 வெளிநாட்டவர்களுக்கு ஆறு முதல் 4 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குவைத் கிட்டத்தட்ட 3.2 மில்லியன் வெளிநாட்டவர்கள் உட்பட 4.8 மில்லியன் மக்களுக்கு தாயகமாக விளங்குகிறது. இவர்களுக்காக கடந்த ஆண்டு டிசம்பரில், குவைத் அரசாங்கம் வெளிநாட்டினருக்கான இ-டிரைவிங் லைசென்ஸை அறிமுகப்படுத்தியது. அதன்படி, வெளிநாட்டவர்கள் தங்கள் உரிமங்களை உள்துறை அமைச்சகத்தின் இணையதளம் அல்லது “Sahel” அரசு செயலி மூலம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கலாம் என கூறப்பட்டிருக்கின்றது.

ADVERTISEMENT

அது மட்டுமின்றி கடந்த 2021 இன் பிற்பகுதியில், குவைத் அரசு, வெளிநாட்டவர்களுக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்குவதற்கான புதிய முறையை வெளியிட்டதுடன், லைசென்ஸ் வைத்திருப்பவர்களின் தரவை மதிப்பாய்வு செய்து தகுதியற்றவர்களின் தரவை ரத்து செய்தது குறிப்பிட்டளவிலான வெளிநாட்டவர்கள் தங்களின் குவைத் டிரைவிங் லைசென்ஸை இழக்க காரணமாக அமைந்தது.

வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் தகுதிகள் மற்றும் ஊதியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதே இந்தத் திருத்தத்தின் நோக்கமாகும் என அதிகாரிகள் இது குறித்து தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel