ADVERTISEMENT

UAE: இந்தாண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு வரவுள்ள ஒற்றை GCC விசா’..!! அதிகாரிகள் வெளியிட்ட தகவல்கள்..!!

Published: 7 May 2024, 4:14 PM |
Updated: 7 May 2024, 4:14 PM |
Posted By: Menaka

சமீபகாலமாக, வளைகுடா நாடுகளில் (GCC) வசிக்கும் குடியிருப்பாளர்கள் GCC உறுப்பு நாடுகளுக்கிடையே எளிதாக பயணிக்கவும், வளைகுடா நாடுகளில் சுற்றுலாவை மேம்படுத்தவும் ‘ஒற்றை விசா (unified visa)’ செயல்முறையை நடைமுறைப்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒருங்கிணைந்த GCC சுற்றுலா விசா நடைமுறைக்கு வரும் நேற்று திங்கள்கிழமை (மே 6) அரேபிய பயண சந்தையில் ஷார்ஜா வர்த்தக மற்றும் சுற்றுலா ஆணையத்தின் உயரதிகாரியான (SCTDA) காலித் ஜாசிம் அல் மித்ஃபா தெரிவித்துள்ளார்.

இது குறித்து வளைகுடா பிராந்திய சுற்றுலா குறித்த கூட்டத்தில் பேசிய அல் மித்ஃபா, இது ஒரு நல்ல முன்முயற்சியாக இருக்கும், இ-சேவைகள் ஒற்றை விசாவிற்கு முக்கிய பகுதி என்று குறிப்பிட்டதுடன் இதற்காக நாங்கள் இரவும் பகலும் உழைக்கிறோம், மேலும் பிராந்திய பொருளாதாரங்களுக்கு நேர்மறையான முடிவுகளைக் காண்போம் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், இந்த பிராந்திய சுற்றுலா விசாக்கள் GCC கிராண்ட் டூர்ஸ் என்று அழைக்கப்படும் என்றும், இது GCCயின் ஆறு உறுப்பு நாடுகளில் சுற்றுலாப் பயணிகள் 30 நாட்களுக்கு மேல் செலவிட அனுமதிக்கும் என்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் தூக் அல் மரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சவுதி தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற (World Economic Forum) கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் பேசிய அல் மரி, ஒற்றை விசா நடைமுறைக்கு வந்ததும், GCC நாடுகளில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களை இது மேம்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன், GCC நாடுகளை நோக்கி நீண்ட காலத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், தக்கவைக்கவும் இது பங்களிக்கும் மற்றும் இதனால் ஹோட்டல் விருந்தினர்களின் எண்ணிக்கை அதிகரித்து, பிராந்திய மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் முன்னணி இடமாக வளைகுடா நாடுகள் மாறும் என்றும் த குறிப்பிட்டுள்ளார்.

பயண பேக்கேஜ்கள் உருவாக்கம்:

தற்சமயம், UAE மற்றும் பிற வளைகுடா நாடுகள் பெரிய சுற்றுலா ஆபரேட்டர்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து முழு பிராந்தியத்தையும் கவனித்துக் கொள்ளும் பேக்கேஜ்களை வெளியிடுவதற்காக பணிபுரிந்து வருவதாக அல் மித்ஃபா தெரிவித்துள்ளார். கூடவே, GCC சிங்கிள் டூரிஸ்ட் விசா அஅறிமுகப்படுத்தப்பட்டதும், நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா ஆபரேட்டர்கள் ஒருங்கிணைந்த பேக்கேஜ்களை தானாகவே வெளியிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்ள்ளார்.

அதேசமயம், கூட்டாண்மைகளை உருவாக்க ஹோட்டல்கள் மற்றும் விமான நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், GCC ஒற்றை விசாவின் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் பார்வையாளர்கள் தங்கியிருக்கும் காலத்தை நீட்டிப்பதே இதன் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், ஒற்றை சுற்றுலா விசா நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் ஓய்வு மற்றும் வணிக டிராவல் பேக்கேஜ்களை தனியார் துறை வெளியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, பஹ்ரைன் அரசானது ஆறு பிராந்தியத்திற்கும் பேக்கேஜ்களை உருவாக்கி வருவதாக பஹ்ரைனின் சுற்றுலா மற்றும் கண்காட்சிகள் ஆணையத்தின் (Bahrain Tourism and Exhibitions Authority) CEO சாரா புஹிஜ்ஜியும் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel