ADVERTISEMENT

UAE: ஷாப்பிங் செய்து விட்டு பணம் செலுத்த இனி உங்கள் உள்ளங்கை போதும்.. விரைவில் வரும் நவீன தொழில்நுட்பம்..!!

Published: 7 May 2024, 7:19 PM |
Updated: 8 May 2024, 8:11 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு கார்டு மூலம் பணம் செலுத்துகிறீர்களா? இனி உங்கள் கார்டுகள் அல்லது தொலைபேசிகளை கேஷ் கவுண்டர்களில் ஸ்வைப் செய்ய வேண்டிய அவசியமில்லை, நீங்கள் ஷாப்பிங் செய்த பொருட்களுக்கு இயந்திரங்களின் முன் உங்கள் உள்ளங்கையை அசைத்தால் போதும், கட்டணச் செயல்முறையை எளிதாக முடிக்கலாம்.

ADVERTISEMENT

ஆம், விற்பனை நிலையங்களில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் வரும் நாட்களில் தங்களின் உள்ளங்கையை மட்டுமே பயன்படுத்தி, பணத்தை செலுத்தும் ‘Palm Pay’ எனும் புதிய தொழில்நுட்பம் அமீரகத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக இதனை வடிவமைத்துள்ள அஸ்ட்ராடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை துபாயில் உள்ள மதீனத் ஜுமைராவில் நடைபெற்ற துபாய் ஃபின்டெக் உச்சிமாநாட்டில் (Dubai Fintech Summit) அஸ்ட்ராடெக் நிறுவனம் அதன் துணை நிறுவனமான PayBy மூலம் இந்த கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் 2024 முழுவதும் ‘Palm Pay’ தொழில்நுட்பம் அமீரகத்தில் படிப்படியாக வெளியிடப்படும் என்றும் அஸ்ட்ராடெக் நிறுவனம் கூறியுள்ளது.

ADVERTISEMENT

Palm Pay என்பது தொடர்பு இல்லாத உள்ளங்கை அங்கீகார சேவையாகும். இது பயோமெட்ரிக் அங்கீகார முறைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த உதவுகிறது. கட்டண இயந்திரங்கள் வாடிக்கையாளர்களின் கைரேகைகளை ஸ்கேன் செய்து பரிவர்த்தனைகளை அங்கீகரிக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இயந்திரங்கள் மூலம், உள்ளூர் சந்தை உள்கட்டமைப்பிற்குள் சோதனை நடத்தப்படும் என்று கூறிய அஸ்ட்ராடெக் நிறுவனம், இது ஆண்டு முழுவதும் 50,000 PayBy வணிகர்களை அளவிடுவதற்கான முழுமையான தயார்நிலையை உறுதி செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

எவ்வாறாயினும், Palm Pay முறையில் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமீரகம் முழுவதும் இந்த ஆண்டிற்குள் தடையின்றி வெளிவருவதை உறுதிசெய்ய, தற்போது இறுதி விவரங்களை சரிபார்த்து வருவதாகவும் அஸ்ட்ராடெக் நிறுவனத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தை வங்கிகளுடன் ஒருங்கிணைக்கும் முயற்சியையும் நிறுவனம் மேற்கொண்டு வருவதாகவும், இது பயனர்கள் தங்கள் கணக்குகளை நேரடியாக அதனுடன் இணைக்க உதவும் எனவும் அஸ்ட்ராடெக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் எவ்வாறு பதிவு செய்யலாம்?

தற்பொழுது, இந்த தொழில்நுட்பம் பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஆரம்பகட்டத்தில் பயனர்கள் கடைகளில் உள்ள இயந்திரத்தின் மூலம் பதிவு செய்ய முடியும். எதிர்காலத்தில், உள்ளங்கை அங்கீகரிப்பு செயல்முறையானது PayBy மற்றும் Botim போன்ற ஆப்களில் ஒருங்கிணைக்கப்படும்.

எனவே, வாடிக்கையாளர்கள் தங்கள் தொலைபேசியில் உள்ள அங்கீகார அம்சத்தின் மூலம் தங்கள் உள்ளங்கை அச்சுடன் தங்கள் கணக்குகளை எளிதாக புதுப்பிக்க அனுமதிக்கும். குறிப்பாக, இந்த நவீன தொழில்நுட்பத்தைப் பின்பற்றும் அனைத்து கடைகளிலும் உள்ளங்கைகளை அசைப்பதன் மூலம் எளிதாக பணம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel