ADVERTISEMENT

அஜ்மான்-துபாய் இடையேயான பேருந்து சேவை..!! கட்டணம், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இங்கே..!!

Published: 11 May 2024, 5:52 PM |
Updated: 11 May 2024, 6:26 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் உள்ள ஏழு எமிரேட்களில் ஒன்றான அஜ்மானில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வசதிக்காக துபாய் மற்றும் அஜ்மான் இடையே வெறும் 15 திர்ஹம்ஸ் கட்டணத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதாவது, அஜ்மானின் அல் முசல்லா பஸ் நிலையத்திலிருந்து துபாயின் பல்வேறு பகுதிகளுக்கு இந்த இன்டர்சிட்டி பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது.

ADVERTISEMENT

அதன்படி, துபாயின் சென்டர்பாயின்ட் பஸ் நிலையம், மெட்ரோ ரெட் லைன், மெட்ரோ கிரீன் லைனின் தொடக்கத்தில் இருக்கும் எடிசலாட் பஸ் நிலையம் மற்றும் தேராவில் உள்ள யூனியன் பஸ் நிலையம் ஆகியவற்றை அஜ்மானுடன் இணைக்கும் வகையில் தினந்தோறும் இயக்கப்படும் பேருந்துகளின் அனைத்து வழித்தடங்களும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.

DXB 1 – அஜ்மான் டிரான்ஸ்போர்ட்டின் இன்டர்சிட்டி பேருந்து

ஷேக் அப்துல்லா பின் ரஷீத் சாலையில் உள்ள அல் முசல்லா பஸ் நிலையத்திலிருந்து சென்டர்பாயின்ட் மெட்ரோ நிலையத்திற்கு அடுத்துள்ள சென்டர்பாயிண்ட் பஸ் நிலையத்திற்கு செல்லும் அஜ்மான் பேருந்து சேவையானது DXB 1 வழித்தடத்தை கொண்டுள்ளது.

ADVERTISEMENT

அல் முசல்லா பேருந்து நிலையத்திலிருந்து காலை 5.45 மணிக்கு பேருந்து சேவை தொடங்குகிறது மற்றும் நாள் முழுவதும் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் பேருந்துகள் புறப்படும். கடைசி பேருந்து இரவு 10.45 மணிக்கு நிலையத்திலிருந்து புறப்படும்.

அதேபோல், சென்டர்பாயின்ட் பஸ் நிலையத்திலிருந்து காலை 7.15 மணிக்கு பேருந்து சேவை தொடங்குகிறது மற்றும் நாள் முழுவதும் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் பேருந்துகள் கிடைக்கும். கடைசி பேருந்து 12.15 மணிக்கு நிலையத்திலிருந்து புறப்படுகிறது.

ADVERTISEMENT

டிக்கெட் கட்டணம்:

உங்களிடம் அஜ்மான் போக்குவரத்தின் மசார் கார்டு இருந்தால், டிக்கெட்டின் விலை 15 திர்ஹம்ஸ் ஆகும். உங்களிடம் அந்த கார்டு இல்லையென்றால், டிக்கெட்டுக்கு நீங்கள் பணமாகச் செலுத்தலாம், அதற்கு 19 திர்ஹம்ஸ் செலவாகும்.

துபாய் RTA இன் E400 மற்றும் E411 பேருந்து

நீங்கள் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) இன்டர்சிட்டி பேருந்து சேவை மூலமாகவும் அஜ்மான்- துபாய் இடையே பயணிக்கலாம். RTA அஜ்மானுக்கு  இரண்டு பேருந்துகளை இயக்குகிறது. இந்த பேருந்துகள் அஜ்மானுக்குள் பிரபலமான இடங்களில் பல நிறுத்தங்களை கொண்டுள்ளன, எனவே உங்கள் இடத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்குவதற்கு இந்த பேருந்து வசதியாக இருக்கும்.

1. E400 – யூனியன் பஸ் நிலையம்

RTAஆல் இயக்கப்படும் E400 இன்டர்சிட்டி பேருந்து தேராவில் உள்ள யூனியன் பேருந்து நிலையத்திலிருந்து அஜ்மானில் உள்ள அல் முசல்லா பேருந்து நிலையத்திற்குச் செல்கிறது. துபாய் முதல் அஜ்மான் வரையிலான பயணத்திற்கு 12 திர்ஹம்ஸ் செலவாகும், அதே வேளையில், அஜ்மானிலிருந்து துபாய் வழித்தடத்தில் 15 திர்ஹம்கள் செலவாகும். உங்கள் நோல் கார்டைப் பயன்படுத்தியும் டிக்கெட்டுக்கு பணம் செலுத்தலாம்.

2. E411 – Etisalat பேருந்து/மெட்ரோ நிலையம் (க்ரீன் லைன்)

E411 பேருந்து, அஜ்மானில் உள்ள அல் முசல்லா பேருந்து நிலையத்திற்கும் க்ரீன் லைன் எடிசலாட் மெட்ரோ நிலையத்திற்கு அடுத்ததாக உள்ள எடிசலாட் பேருந்து நிலையத்திற்கும் இடையில்  இயங்குகிறது. துபாய் முதல் அஜ்மான் வழித்தடத்தில் பயணம் செய்ய 12 திர்ஹமும், அஜ்மானில் இருந்து துபாய்க்கு 15 திர்ஹமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel