ADVERTISEMENT

UAE: எமிராட்டிசேஷன் விதிகளை மீறிய 1300 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள்!! 100,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்பட்டதாக MOHRE அறிவிப்பு..

Published: 17 May 2024, 12:26 PM |
Updated: 17 May 2024, 12:26 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MOHRE) 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து மே 16, 2024 வரை, எமிராட்டிசேஷன் விதிகளை மீறிய குற்றத்திற்காக நாடு முழுவதும் உள்ள சுமார் 1,300 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், மனிதவள அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட எமிராட்டிசேஷன் இலக்கை அடையும் முனைப்பில் போலியாக எமிராட்டியர்களை பணியமர்த்தி மோசடி செய்யும் சில நிறுவனங்களுக்கு எதிராகவும் அதிகாரம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அமீரகத்தில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் எமிராட்டிசேஷன் கொள்கைக்கு ஏற்ப எமிராட்டியர்களை பணியமர்த்தாமல் இருந்தது கண்டறியப்பட்டு, விதியை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு வழக்குக்கும் 20,000 திர்ஹம்ஸ் முதல் 100,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel