ADVERTISEMENT

அமீரகத்தில் இருந்து அண்டை நாடுகளுக்குச் செல்ல வாகன பெர்மிட்டிற்கு விண்ணப்பிப்பது எப்படி..??

Published: 27 May 2024, 12:07 PM |
Updated: 27 May 2024, 12:21 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் நீங்கள் அமீரகத்தை விட்டு வெளியே அதாவது சவூதி அரேபியா, ஓமான் போன்ற அண்டை நாடுகளுக்கு உங்கள் வாகனங்களில் சாலைப் பயணம் செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால், அமீரகக் குடிமகனாக இருந்தாலும் அல்லது வெளிநாட்டவராக இருந்தாலும், சுற்றுலா வாகனச் சான்றிதழைப் (tourist vehicle certificate) பெறுவது மிகவும் முக்கியமாகும். இது உங்கள் சாலைப் பயணத்தை சட்டரீதியான தடைகளின்றி அனுபவிக்க உதவுகிறது.

ADVERTISEMENT

மேலும், இந்தச் சான்றிதழ் உங்கள் வாகனம் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைத் தரங்களுடன் இணங்குவதைச் சரிபார்த்து, மற்ற நாடுகளில் பயணம் செய்வதற்கான உரிமையை உங்களுக்கு வழங்கும் என்று கூறப்படுகிறது. எனவே, நீங்கள் நாட்டின் எல்லையைக் கடந்து செல்லும் சாலைப் பயணங்களுக்கு முன், சர்வதேச ஓட்டுநர் உரிமம் (IDL) உட்பட தேவையான அனைத்து ஆவணங்களும் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது சிறந்ததாகும். சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெறுவது குறித்த விபரங்களுக்கு சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி..?? என்ற இந்த லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

உங்களிடம் இந்த ஓட்டுநர் உரிமம் இருந்து மற்ற நாடுகளுக்கு சாலை வழியாக நீங்களே வாகனத்தை ஓட்டிச் செல்ல விரும்பினால் வாகன சான்றிதழை பெற்றால் போதும். சுற்றுலா வாகனச் சான்றிதழானது (Tourist Vehicle Certificate) சுற்றுலா அல்லது உத்தியோகபூர்வ வேலைக்காக பதிவு செய்யப்பட்ட வாகனத்தில் GCC முழுவதும் பயணிக்க அனுமதிக்கும். யாரெல்லாம் இந்த சான்றிதழுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என்பது  பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தகுதி:

UAE குடிமக்கள், GCC குடிமக்கள், வெளிநாட்டு குடியிருப்பாளர்கள், தூதர்கள், நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் துபாயில் உள்ள இராஜதந்திர அமைப்புகளின் பணியாளர்கள் இந்த சேவைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். இதற்கான செல்லுபடியாகும் காலம் 6 மாதங்கள் ஆகும்.

துபாயில் சேவை கட்டணம்

  • இலகுரக வாகனங்களுக்கு – 100 திர்ஹம்
  • மோட்டார் சைக்கிள் 3 முதல் 12 டன் வரை இருந்தால் – 100 திர்ஹம்ஸ்
  • வாகனம் 12 டன்களுக்கு மேல் இருந்தால் – 200 திர்ஹம்ஸ்
  • இலகுரக இயந்திர உபகரணங்கள் (mechanical equipment) – 100 திர்ஹம்ஸ்
  • கனரக இயந்திர உபகரணங்கள்- 200 திர்ஹம்ஸ்
  • பயணிகளின் எண்ணிக்கை 14 மற்றும் 26 க்கு இடையில் செல்லும் பேருந்து – 100 திர்ஹம்
  • 26க்கும் அதிகமான பயணிகளுடன் செல்லும் பேருந்து – 200 திர்ஹம்
  • Knowledge and Innovation கட்டணம்- 20 திர்ஹம்ஸ்

தேவையான ஆவணங்கள்:

விண்ணப்பதாரர்கள் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) மூலம் விண்ணப்ப செயல்முறையின் போது பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

வெளிநாட்டு குடியிருப்பாளர்கள் (residents)

  1. வாகனம் அடமானம் (mortgaged) வைக்கப்பட்டிருந்தால், அடமானக்காரரிடமிருந்து (mortgagor) ஒரு eNOC.
  2. ATCUAE (Automobile and Touring Club – UAE) இலிருந்து eNOC.

நிறுவனங்கள்

  1. மெமோராண்டம் ஆஃப் அசோசியேஷன் அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது (சட்ட மொழிபெயர்ப்பு).
  2. சுற்றுலா சான்றிதழைக் கோரும் நிறுவனத்திடமிருந்து அரபு மொழியில் அதிகாரப்பூர்வ கடிதம்.
  3. வர்த்தக உரிமத்தின் நகல்.
  4. வாகனம் அடமானம் வைக்கப்பட்டிருந்தால், அடமானக்காரரிடமிருந்து ஒரு eNOC.
  5. ATCUAE இலிருந்து eNOC.
  6. ஓட்டுநரின் அசல் எமிரேட்ஸ் ஐடி.
  7. ஓட்டுநரின் அசல் ஓட்டுநர் உரிமம்.

விண்ணப்பிக்கும் வழிகள்

குடியிருப்பாளர்கள் RTA இணையதளம் மூலம் வாகன அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான செயல்முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

  • RTA இணையதளத்தில் register/login செய்து உள்நுழையவும் அல்லது UAE PASS-ஐ பயன்படுத்தவும்
  • சான்றிதழ் குழுவைக் கிளிக் செய்து, வாகனச் சான்றிதழ்களைத் தேர்ந்தெடுக்கவும்
  • சான்றிதழ் வகையைக் கிளிக் செய்து, சுற்றுலா நோக்கங்களுக்காக அமீரகத்திற்கு வெளியே வாகனத்தைப் பயன்படுத்துவதற்கான சான்றிதழைத் தேர்ந்தெடுக்கவும்.
  • தேவையான தகவல்களை உள்ளிடவும்
  • வாகன விவரங்களை வழங்கவும்
  • கிரெடிட் கார்டு மூலம் தேவையான கட்டணங்களை செலுத்தவும்
  • இறுதியாக, SMS மற்றும் மின்னஞ்சல் மூலம் சான்றிதழைப் பெறுவீர்கள்.

மாறாக, வாகன அனுமதி கோரும் பயணிகள் துபாயில் உள்ள உம் ராமுல், அல் மனாரா, அல் த்வார், தேரா, அல் பர்ஷா ஆகிய இடங்களில் இருக்கக்கூடிய வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்களுக்குச் சென்றும் விண்ணப்பிக்கலாம். அத்துடன் துபாய் முழுவதும் உள்ள 23 வாகனப் பதிவு மற்றும் ஆய்வு மையங்களிலும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

செயல்முறை

  • வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி மையங்கள் மற்றும் ஆய்வு மையத்தில் உள்ள ஊழியரைச் சந்திக்கவும்.
  • தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும்
  • அதன்பிறகு, தேவையான கட்டணங்களை செலுத்துங்கள்
  • மையத்திலிருந்து சான்றிதழைப் பெறுங்கள்

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

  1. வாடிக்கையாளர் அல்லது சட்டப் பிரதிநிதி நேரில் ஆஜராக வேண்டும்
  2. ஓட்டுநருடன் நிறுவனத்தின் பிரதிநிதி இருக்க வேண்டும்
  3. இந்த சேவையைப் பெறுவதற்கு முன்பு வாடிக்கையாளர் அனைத்து போக்குவரத்து அபராதங்களையும் செலுத்த வேண்டும்
  4. வாகனம் அடமானம் வைக்கப்பட்டிருந்தால், வாடிக்கையாளர் அடமானத்தை டிஜிட்டல் முறையில் விடுவிக்க வேண்டும் அல்லது சேவைக்கு விண்ணப்பிக்க அடமானக்காரரிடமிருந்து NOC ஐ பெற வேண்டும்.
  5. உரிமையாளரைத் தவிர வேறு ஒருவர் வாகனத்தை ஓட்டினால், அவர் தனது ஓட்டுநர் உரிமத்தை வழங்க வேண்டும்.
  6. வாகன ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் நேரில் ஆஜராக வேண்டும்.
  7. ஒரு சரக்கு நிறுவனம் மூலம் வாகனத்தை கொண்டு செல்லும் பட்சத்தில், வாடிக்கையாளர் சரக்கு நிறுவன வர்த்தக உரிமத்தின் நகலை வழங்க வேண்டும்

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel