ADVERTISEMENT

அமீரகத்தில் செகண்ட் ஹேண்ட் காரை வாங்கும் போது விபத்து வரலாற்றை சரிபார்ப்பது எப்படி??

Published: 30 May 2024, 1:05 PM |
Updated: 30 May 2024, 1:08 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் வசிக்கும் பலர் செகண்ட் ஹேண்ட் கார் என்று சொல்லக்கூடிய பயன்படுத்திய காரினை வாங்குவது வழமையாக நடைபெற்று வரக்கூடிய ஒரு செயல்முறையாகும். சொந்தமாக வாகனம் வைத்திருக்க விரும்பும் அதே வேளையில் குறைந்த விலைக்கு வாகனத்தை வாங்குவதற்காக பலரும் used vehicle எனும் பயன்படுத்திய வாகனங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். அதே சமயம் இவ்வாறு வாகனங்களை விலைக்கு வாங்கும்போது சில நேரங்களில் குறைகளும் ஏற்படுகின்றன.

ADVERTISEMENT

எனவே நீங்கள் செகண்ட் ஹேண்ட் கார் அல்லது உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடமிருந்து வாகனத்தை விலைக்கு வாங்கும் போது கவனத்துடன் சரிபார்ப்பது சிறந்ததாகும். அதிலும் முக்கியமான ஒன்று பொதுவாக பயன்படுத்திய காரை வாங்கும் போது, காரின் முந்தைய வரலாற்றைச் சரிபார்ப்பது அவசியம். இது வாகனம் சந்தித்த விபத்துகள் மற்றும் அதன் சில பாகங்கள் அசல்தானா இல்லையா என்பதைக் கண்டறிய உதவும்.

அதுமட்டுமில்லாமல், காரின் நம்பர் பிளேட் அல்லது முந்தைய உரிமையாளரின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கும் போக்குவரத்து அபராதங்களைத் தவிர்க்கவும் இது உதவும். அமீரகத்தில் ஒரு வாகனத்தின் வரலாற்றைச் சரிபார்க்க, வாகனத்தின் பதிவு அட்டையில் காணப்படும் சேஸ் எண் எனப்படும் வாகன அடையாள எண் (Vehicle Identification Number-VIN) அவசியமாகும்.

ADVERTISEMENT

அமீரகத்தில் நீங்கள் எந்த எமிரேட்டில் வசிக்கிறீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல்,  வாகனங்களின் விபத்து வரலாற்றை எவ்வாறு அணுகலாம் என்பது பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

  • அமீரகக் குடியிருப்பாளர்கள் உள்துறை அமைச்சகத்தின் இணையதளம் மூலம் வாகன விபத்து வரலாற்றை அணுகலாம்.
  • இணையதளத்தில் நுழைந்ததும் ‘accident’s enquiry’ என்ற பிரிவின் கீழ், தங்கள் வாகனத்தின் VIN எண்ணை உள்ளிட வேண்டும். விபத்து அறிக்கைகள் ஏதேனும் இருந்தால், அது எப்போது நடந்தது மற்றும் விபத்துக்குள்ளான வகை பற்றிய தகவல்கள் திரையில் தோன்றும்.
  • இது தவிர, ‘Emirates Vehicle Gate’ என்ற மற்றொரு போர்டல் மூலமாகவும் அமீரகக் குடியிருப்பாளர்கள் தங்கள் காரின் விபத்து வரலாற்றை அணுக முடியும்.
  • இதில் வாகன ஓட்டிகள் முதலில் ஒரு அக்கவுண்ட்டை உருவாக்க வேண்டும். அதன் பிறகு, காரின் VIN எண்ணை உள்ளிட்டு தொடர வேண்டும். இப்போது ‘traffic accident’s management’ என்ற பிரிவின் கீழ் காரின் விபத்து வரலாற்றை உடனடியாக காண்பிக்கும். வாகன ஓட்டிகள், வாகனத்தின் நேரம், இடம் மற்றும் தற்போதைய நிலை ஆகியவற்றுடன் விபத்து வகையையும் இதில் சரிபார்க்க முடியும்.

அபுதாபி காவல்துறை:

ஒரு வாகனம் அபுதாபியில் பதிவு செய்யப்பட்டிருந்து அது விற்கப்பட்டாலோ அல்லது வாங்கப்பட்டாலோ, வாகனத்தின் விபத்து வரலாற்றை எடுக்க ஓட்டுநர்கள் காவல்துறையின் இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டும். ஐக்கிய அரபு அமீரகத்தின் எந்தப் பகுதியிலும் கார் விபத்துக்குள்ளானதையும் இதில் காணலாம். இணையதளத்தில் நுழைந்ததும், ‘inquire about car accidents’ என்பதன் கீழ், உங்கள் காரின் சேஸ் எண்ணை உள்ளிட்டு அதன் விபத்து வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel