துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்களின் போக்குவரத்து செலவுகளில் பணத்தை சேமிக்க பெரிதும் உதவுவது துபாய் மெட்ரோ, பொதுப் பேருந்து மற்றும் அப்ரா உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வசதிகளாகும். அதற்கு காரணம் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் ஒருவர் துபாய் மெட்ரோவிலிருந்து 30 நிமிடங்களுக்குள் பேருந்துக்கு மாறினால், அது அதே பயணத்தின் ஒரு பகுதியாகவே கணக்கிடப்படும்.
ஏனெனில், பயணிகள் எத்தனை போக்குவரத்து முறைகளில் பயணிக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் பயணிக்கும் மண்டலங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கட்டணம் விதிக்கப்படுகிறது. எனவே, துபாயில் உள்ள பொதுப் போக்குவரத்து விருப்பங்களை நீங்கள் அதிகம் பெறுவதற்கு என்ன மண்டலங்கள் மற்றும் விதிகள் உள்ளன என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
துபாயில் பொது போக்குவரத்து கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
துபாய் பொது போக்குவரத்து நெட்வொர்க் ஏழு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் மெட்ரோ நிலையங்கள், பேருந்து நிலையங்கள், டிராம் நிலையங்கள் மற்றும் கடல் போக்குவரத்து நிலையங்கள் உள்ளன. எனவே, உங்கள் பயணத்திற்காக வெவ்வேறு மண்டலங்களில் அமைந்துள்ள பல்வேறு போக்குவரத்து முறைகளை நீங்கள் தேர்வு செய்யலாம்.
இறுதியாக, நீங்கள் கடந்து சென்ற மொத்த மண்டலங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும். எவ்வாறாயினும், உங்கள் பயணத்திற்கு வெவ்வேறு போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்தினால், 30 நிமிடங்களுக்குள் அவற்றிற்கு இடையே மாறுவதை உறுதிசெய்ய வேண்டும், அது ஒரு தொடர்ச்சியான பயணமாக கணக்கிடப்படும்.
உதாரணமாக, நீங்கள் மெட்ரோவில் பயணித்து, உங்கள் இலக்கை அடைய பேருந்திற்கு மாறலாம். ஆனால் நீங்கள் மெட்ரோ நிலையத்தில் இருந்து செக்-அவுட் செய்த பிறகு, அடுத்த 30 நிமிடங்களுக்குள் பேருந்தில் செக்-இன் செய்வதை உறுதிசெய்ய வேண்டும். நீங்கள் இதை சரியான நேரத்தில் செய்தால், உங்கள் மெட்ரோ மற்றும் பேருந்து பயணங்கள் ஒரே பயணமாக கணக்கிடப்படும். இதனால் பயணக் கட்டணம் இரட்டிப்பாகாது.
பரிமாற்ற விதிகள்:
பொதுப் போக்குவரத்து பரிமாற்ற விதிகளின் படி, நீங்கள் அதிகபட்சமாக மூன்று வெவ்வேறு பொது போக்குவரத்து முறைகளுக்கு இடையில் மாறலாம். மேலும், மொத்த பயண காலத்திற்கான அதிகபட்ச வரம்பும் விதியில் உள்ளது, அது 180 நிமிடங்களுக்கு மேல் இருக்கக்கூடாது.
மண்டலங்களுக்கு இடையேயான பயணத்திற்கு ஆகும் செலவு:
நீங்கள் ஒரு மண்டலத்திற்குள் பயணம் செய்யும் போது 3 திர்ஹம் செலவாகும். இரண்டு மண்டலங்களுக்கு இடையே பயணித்தால் 5 திர்ஹம்ஸ் மற்றும் பல மண்டலங்களுக்கு இடையே பயணித்தால் 7.50 திர்ஹம் செலவாகும். இது நிலையான கட்டணம் என்றாலும், உங்களிடம் உள்ள நோல் கார்டு வகையைப் பொறுத்து செலவு மாறுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மண்டலத்திற்குள் பயணம் செய்வதற்கான கட்டணம்:
- சிவப்பு டிக்கெட் – 4 திர்ஹம்ஸ்
- தனிப்பட்ட (நீலம்) – 3 திர்ஹம்ஸ்
- சில்வர் கார்டு: Dh3 திர்ஹம்ஸ்
- கோல்டு கார்டு – Dh6 திர்ஹம்ஸ்
இரண்டு அருகருகே உள்ள மண்டலங்களுக்குள் பயணம் செய்வதற்கான கட்டணம்:
- சிவப்பு டிக்கெட் – 6 திர்ஹம்ஸ்
- தனிப்பட்ட (நீலம்) – 5 திர்ஹம்ஸ்
- சில்வர் கார்டு – 5 திர்ஹம்ஸ்
- கோல்டு கார்டு – 10 திர்ஹம்ஸ்
இரண்டுக்கும் மேற்பட்ட மண்டலங்களுக்கு இடையே பயணம் செய்வதற்கான கட்டணம்:
- சிவப்பு டிக்கெட் – 8.5 திர்ஹம்ஸ்
- தனிப்பட்ட (நீலம்) – 7.50 திர்ஹம்ஸ்
- சில்வர் கார்டு – 7.50 திர்ஹம்ஸ்
- கோல்டு கார்டு – 15 திர்ஹம்ஸ்
ரெட் லைனில் உள்ள துபாய் மெட்ரோ நிலைய மண்டலங்கள்:
- R11 – சென்டர்பாயின்ட் (முன்னர் ரஷிதியா) (மண்டலம் 5)
- R12 – எமிரேட்ஸ் (மண்டலம் 5)
- R14 – ஏர்போர்ட் டெர்மினல் 1 (மண்டலம் 5)
- R15 – GGICO (மண்டலம் 5)
- R16 – தேரா சிட்டி சென்டர் (மண்டலம் 5)
- R17 – அல் ரிக்கா (மண்டலம் 5)
- R18 – யூனியன் (மண்டலம் 5)
- R19 – பர்ஜுமன் (மண்டலம் 6)
- R20 – ADCB (மண்டலம் 6)
- R21 – மேக்ஸ் (மண்டலம் 6)
- R22 – வேர்ல்டு டிரேட் சென்டர் (மண்டலம் 6)
- R23 – எமிரேட்ஸ் டவர்ஸ் (மண்டலம் 6)
- R24 – ஃபைனான்ஷியல் சென்டர் (மண்டலம் 6)
- R25 – புர்ஜ் கலிஃபா -துபாய் மால் (மண்டலம் 6)
- R26 – பிசினஸ் பே (மண்டலம் 6)
- R29 – ஆன்பாஸிவ் (மண்டலம் 2)
- R31 – ஈக்விட்டி (முன்னர் Umm Al Sheif) (மண்டலம் 2)
- R32 – மால் ஆஃப் தி எமிரேட்ஸ் (மண்டலம் 2)
- R33 – மஷ்ரெக் (மண்டலம் 2)
- R34 – துபாய் இன்டர்நெட் சிட்டி (மண்டலம் 2)
- R35 – அல் கைல் (மண்டலம் 2)
- R36 – சோபா ரியாலிட்டி (மண்டலம் 2)
- R37 – DMCC (மண்டலம் 2)
- R38 – ஜபல் அலி (மண்டலம் 2)
- R39 – இபின் பட்டுட்டா (மண்டலம் 2)
- R40 – எனர்ஜி (மண்டலம் 2)
- R41 – டான்யூப் (மண்டலம் 1)
- R42 – UAE எக்ஸ்சேஞ்ச் (மண்டலம் 1)
- R70 – தி கார்டன்ஸ் (மண்டலம் 2)
- R71 – டிஸ்கவரி கார்டன்ஸ் (மண்டலம் 2)
- R72 – அல் ஃபுர்ஜான் (மண்டலம் 2)
- R73 – ஜுமேரா கோல்ஃப் எஸ்டேட்ஸ் (மண்டலம் 3)
- R74 – துபாய் இன்வஸ்ட்மென்ட் பார்க் (மண்டலம் 1)
- R76 – எக்ஸ்போ 2020 (மண்டலம் 1)
கிரீன் லைனில் உள்ள துபாய் மெட்ரோ நிலைய மண்டலங்கள்:
- G11 – எடிசலாட் (மண்டலம் 5)
- G12 – அல் குசைஸ் (மண்டலம் 5)
- G13 – துபாய் ஏர்போர்ட் ஃப்ரீ ஜோன் (மண்டலம் 5)
- G14 – அல் நஹ்தா (மண்டலம் 5)
- G15 – ஸ்டேடியம் (மண்டலம் 5)
- G16 – அல் கியாதா (மண்டலம் 5)
- G17 – அபு ஹெயில் (மண்டலம் 5)
- G18 – அபு பேக்கர் அல் சித்திக் (மண்டலம் 5)
- G19 – சலா அல் டின் (மண்டலம் 5)
- G20 – யூனியன் (மண்டலம் 5)
- G21 – பனியாஸ் சதுக்கம் (மண்டலம் 5)
- G22 – கோல்டு சூக் (மண்டலம் 5)
- G23 – அல் ராஸ் (மண்டலம் 5)
- G24 – அல் குபைபா (மண்டலம் 6)
- G25 – ஷரஃப் DG (மண்டலம் 6)
- G26 – புர்ஜுமன் (மண்டலம் 6)
- G27 – அவுட் மேத்தா (மண்டலம் 6)
- G28 – துபாய் ஹெல்த்கேர் சிட்டி (மண்டலம் 6)
- G29 – அல் ஜடாஃப் (மண்டலம் 6)
- G30 – க்ரீக் (மண்டலம் 6)
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel