துபாயில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகமாகவும் பல்வேறு அம்சங்களையும் கொண்டிருக்கும் துபாய் மால், தற்போதைய அளவை விடவும் இன்னும் மிகப்பெரியதாக உருவெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகின் இரண்டாவது பெரிய ஷாப்பிங் மால் ஆகும். தற்போது, இது 1.2 மில்லியன் சதுர மீட்டர் அளவைக் கொண்டுள்ள இந்த துபாய் மால் ஏற்கனவே 1,200 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது.
இந்நிலையில் மாலில் மேலும் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு விரிவுபடுத்தப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. துபாய் மாலின் டெவலெப்பரும் துபாயின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் டெவலப்பருமான Emaar Properties சுமார் 1.5 பில்லியன் திர்ஹம்ஸ் செலவில் 240 புதிய ஆடம்பர கடைகள் மற்றும் உணவு மற்றும் பான விற்பனை நிலையங்களுடன் துபாய் மாலை விரிவுபடுத்த இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து Emaar நிறுவனத்தின் நிறுவனர் முகமது அலப்பர் பேசுகையில், உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட தளங்களில் ஒன்றான துபாய் மாலின் புதிய விரிவாக்கம், அதற்கு கூடுதல் சிறப்பை தரும் என்றும், இது துபாயின் நிலையை சிறந்த உலகளாவிய இடமாக உறுதிப்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
துபாய் மால் கடந்த ஆண்டான 2023இல், உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட இடமாக பெயர் பெற்றது. அதாவது, சுமார் 105 மில்லியன் பார்வையாளர்களின் வருகையுடன் ஒரு புதிய சாதனையை துபாய் மால் எட்டியது. இது முந்தைய ஆண்டை விட 19 சதவீத அதிகரிப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel