ADVERTISEMENT

அமீரகத்தில் வாட்டி வதைக்கும் வெயில்: தாகத்தை தணிக்க இலவசமாக மோர் வழங்கும் மதுரைக்காரர்…. கோடை சீசன் முழுவதும் கிடைக்கும் எனவும் அறிவிப்பு..!!

Published: 22 Jun 2024, 1:41 PM |
Updated: 22 Jun 2024, 1:42 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், கடுமையான பாலைவன வெப்பம் குடியிருப்பாளர்களை வாட்டி வதைக்கிறது. இத்தகைய உக்கிரமான வெயிலுக்கு மத்தியில் ஷார்ஜாவில் உள்ள ஒரு தமிழ் உணவகம் புத்துணர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

ஷார்ஜாவின், அபுஷாகராவில் உள்ள மதுரை உணவகத்தின் உரிமையாளர் பாபு முருகன், ஜூன் 22 சனிக்கிழமை முதல் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தனது உணவகத்திற்குள் நுழைபவர்களுக்கு இலவச மோர் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், இந்த ப்ரோமோ கோடை சீசன் முழுவதும் உணவகத்தில் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து செய்தி ஊடகங்களிடம் பேசிய உணவக உரிமையாளர் முருகன், கோடை வெப்பம் கொளுத்தும் சமயத்தில் வாடிக்கையாளர்கள் குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் இருக்க ஏதாவது செய்ய விரும்புவதாகக் கூறியதுடன், எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்தது மற்றும் மிகவும் ஆரோக்கியமானது என்பதால் மோர் வழங்க நினைத்ததாகவும், இது புத்துணர்ச்சி அளிப்பது மட்டுமல்லாமல் கோடை வெப்பத்தில் அடிக்கடி ஏற்படும் சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும்,  உள்ளூர் தொண்டு நிறுவனங்களும், தாராள மனப்பான்மையுள்ள தனிநபர்களும் தண்ணீர் குளிரூட்டிகளை நிறுவி, குளிர்ந்த குடிநீரை இலவசமாக வழங்குவது ஒரு உன்னதமான செயல் என்று குறிப்பிட்ட முருகன், அமீரகம் முழுவதும் இதேபோன்ற கருணை செயல்களால் அவரது முயற்சி ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த முருகன், தனது செயலானது கடுமையான கோடை மாதங்களில் தங்கள் சமூகத்தை ஆதரிப்பதற்கான வழிகளைப் பற்றி சிந்திக்க மற்றவர்களை ஊக்குவிக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளார்.

இவரைப் போலவே, ஷார்ஜாவின் மற்ற இடங்களில், 68 வயதான பாகிஸ்தான் பைக்கர் முகமது தாவூத் வார இறுதி நாட்களில் இலவச பாட்டில் தண்ணீரை விநியோகித்து வருகிறார். அவருக்கு வயது முதிர்ச்சியின் சவால்கள் இருந்தபோதிலும், தனது சமூகத்தினரை நீரேற்றமாக வைத்திருப்பதில் அர்ப்பணிப்புடன் இருந்திருக்கிறார். இருப்பினும், உடல்நலக் குறைபாடுகள் காரணமாக, அவர் இப்போது குளிர்ந்த தண்ணீர் பாட்டில்களை தனது காரில் வைத்து, கொதிக்கும் வெயிலில் நடந்து செல்லும் அனைவருக்கும் அவற்றை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel