ADVERTISEMENT

UAE: பொது மன்னிப்பில் செல்பவர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் அபராதங்களிலும் தள்ளுபடி..!! சுகாதாரத்துறை தகவல்..!!

Published: 4 Sep 2024, 4:33 PM |
Updated: 4 Sep 2024, 4:37 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 1, 2024 முதல் அடுத்த இரண்டு மாதங்களுக்கு பொது மன்னிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இது நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அவர்களின் விசா நிலையை சட்டப்பூர்வமாக மாற்ற அல்லது அபராதம் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், சுகாதாரத் துறை – அபுதாபி (DoH) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ரெசிடென்ஸி விதிகளை மீறுபவர்களின் விசா நிலை சரிசெய்தலுக்கான கோரிக்கைகள் ICP-ஆல் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கான சுகாதார காப்பீட்டு (health insurance) அபராதங்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளது.

சட்ட விரோதமாக விதிகளை மீறி தங்கியவர்களுக்கு அவர்களின் புதுப்பிக்காத சுகாதாரக் காப்பீட்டிற்கான கட்டணம் மற்றும் அபராதங்களில் விலக்கு அளிப்பது, சுகாதாரக் காப்பீட்டு அபராதத்திலிருந்து தங்கள் நிலையைத் சரிசெய்வதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் அனைவருக்கும் பொருந்தும் என்றும் DoH விளக்கமளித்துள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக, நாட்டில் விசா காலாவதியான பிறகும் அதிக காலம் தங்கியதற்கு விதிக்கப்படும் அபராதம் அல்லது வெளியேறும் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று ICP அறிவித்திருந்தது. அதுமட்டுமல்லாமல், நாட்டை விட்டு வெளியேற விரும்புபவர்களுக்கு நுழைவுத் தடை விதிக்கப்படாது மேலும் அவர்கள் சரியான விசாவுடன் எந்த நேரத்திலும் அமீரகத்திற்குத் திரும்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT