ADVERTISEMENT

துபாயில் சாலிக் கட்டணம் உயர்வா..?? சமூக ஊடகங்களில் வைரலாகி வருவது உண்மையா..??

Published: 4 Oct 2024, 4:51 PM |
Updated: 4 Oct 2024, 4:51 PM |
Posted By: Menaka

துபாயின் டோல் ஆபரேட்டரான சாலிக் நிறுவனம், எமிரேட்டில் உள்ள டோல் கேட்களில் 8 திர்ஹம்ஸ் வரை டைனமிக் டோல் கட்டணம் என்று சமூக ஊடகங்களில் வைரலாகி வரும வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து சாலிக் நிறுவனத்தின் CEO இப்ராஹிம் சுல்தான் அல் ஹடாத் வெளியிட்ட அறிக்கையில், “சில சமூக ஊடக தளங்களில் பரப்பப்படும் தகவல்கள் தவறானவை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

சமூக வலைத் தளங்களில் வைரலான இடுகையில், கால இடைவெளிகள் மற்றும் கட்டணங்கள் பட்டியலிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த இடுகையில், “AED 4 சாலிக் கட்டணங்களுக்கு குட்பை சொல்ல தயாராக இருங்கள்! காலை 3 மணி முதல் காலை 5 மணி வரை 0 AED மற்றும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை 8 AED” என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆனால், இது போன்று வெளியான விவரங்கள் உண்மையல்ல என்றும், டோல் கட்டணம் தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அல்லது புதுப்பிப்புகளுக்கும் துபாய் ஃபைனான்சியல் மார்க்கெட் (DFM) மற்றும் Salik வலைத்தளத்தை (www.salik.ae) பிரத்தியேகமாகப் பார்க்குமாறும் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களை நிறுவனத்தின் CEO வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

சாலிக் நிறுவனம் செக்யூரிட்டிஸ் அண்ட் கமாடிட்டிஸ் அத்தாரிட்டி (SCA) மற்றும் DFM ஆகியவற்றால் அமைக்கப்பட்டுள்ள வெளிப்படுத்தல் மற்றும் வெளிப்படைத்தன்மை வழிகாட்டுதல்களை முழுமையாக கடைப்பிடிப்பதில் உறுதியாக இருப்பதால், எந்தவொரு குறிப்பிடத்தக்க தகவலும் உறுதிசெய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டவுடன் உடனடியாக சந்தையுடன் பகிரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சாலிக் கேட்கள்:

துபாயில் அல் சஃபா சவுத்தில், அல் மேதான் ஸ்ட்ரீட் மற்றும் உம் அல் ஷீஃப் ஸ்ட்ரீட் இடையே புதிய சாலிக் கேட் அமைந்துள்ளது. இப்போது உள்ளது ஆனால் இன்னும் செயல்படவில்லை. மற்றொன்று, அல் கைல் சாலையில் பிசினஸ் பே கிராசிங்கில் அமைந்துள்ளது. இரண்டு புதிய டோல் கேட்களும் நவம்பர் இறுதிக்குள் செயல்படத் தொடங்கும் என்று சாலிக் நிறுவனத்தின் CEO ஹடாத் உறுதிப்படுத்தினார்.

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் மற்றும் சாலிக் PJSC ஆகியவற்றால் செயல்பாடுகள் தொடங்குவதற்கு முன்னர் பொதுமக்களுக்கு அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு, சாலிக்கின் டோல் கேட்கள் வழியாக சுமார் 593 மில்லியன் பயணங்கள் சென்றன. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, எட்டு சுங்கச்சாவடிகள் வழியாக 238.5 மில்லியன் பயணங்கள் சென்றன, இதன் விளைவாக 1.1 பில்லியன் அரையாண்டு வருவாய் கடந்த ஆண்டு இதே காலத்தை விட 5.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel