ADVERTISEMENT

அமீரக அரசாங்கத்தின் முதல் வணிக கேமிங் உரிமத்தை பெற்றது ‘Wynn Resorts’ நிறுவனம்..!!

Published: 6 Oct 2024, 8:29 PM |
Updated: 6 Oct 2024, 8:29 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது வர்த்தக கேமிங் ஒழுங்குமுறை ஆணையம் (GCGRA) முதல் வணிக கேமிங் ஆபரேட்டர் உரிமத்தை ஹோட்டல் மற்றும் கேசினோ ஆபரேட்டரான Wynn Resortsக்கு வழங்கியிருப்பதாக அறிவித்துள்ளது. இருப்பினும், நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமம் பற்றிய வேறு எந்த விவரங்களையும் GCGRA வழங்கவில்லை.

ADVERTISEMENT

லாஸ் வேகாஸை தளமாகக் கொண்ட கேசினோ நிறுவனம் வின் அல் மர்ஜான் ஐலேண்டை மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா (MENA) பிராந்தியத்தில் முதல் ஒருங்கிணைந்த கேமிங் ரிசார்ட்டாக உருவாக்கி வருகிறது.

Wynn Al Marjan Island  மிக முக்கியமாக கேமிங் அம்சங்களுக்காக மிகவும் எதிர்பார்க்கப்பட்டாலும், கேமிங் அல்லாத வசதிகளையும் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது 22 தனியார் வில்லா எஸ்டேட்கள் உட்பட 1,542 அறைகள் மற்றும் சூட்களைக் கொண்டிருக்கும். லாஸ் வேகாஸ், மக்காவ் மற்றும் பாஸ்டன் துறைமுகத்தில் உள்ள ஆறு சொத்துக்களில் கடற்கரையில் வரும் முதல் வின் ரிசார்ட் இதுவாகும்.

பல பில்லியன் டாலர்கள் செலவில் அரேபிய வளைகுடாவில் கிட்டத்தட்ட 62 ஹெக்டேர் ஐலேண்டில் கட்டப்பட்டு வரும் இந்தத் திட்டம், 2027 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பொதுமக்களுக்கு திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து வணிக கேமிங் நடவடிக்கைகள் மற்றும் வசதிகளை ஒழுங்குபடுத்தும், உரிமம் மற்றும் மேற்பார்வை செய்யும் UAE கூட்டாட்சி அரசாங்கத்தின் ஒரு சுயாதீன நிர்வாக அமைப்பான GCGRA ஆல் வழங்கப்படும் இரண்டாவது உரிமம் இதுவாகும். கடந்த ஜூலை மாதம், அபுதாபியை தளமாகக் கொண்ட ‘The Game LLC’க்கு நாட்டிலேயே முதல் அங்கீகரிக்கப்பட்ட லாட்டரியை இயக்குவதற்கான உரிமத்தை கேமிங் அதிகாரம் வழங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel