ADVERTISEMENT

அமீரகத்தில் பிறப்புச் சான்றிதழின் நகலை ஆன்லைன் அல்லது ஆப் மூலம் எப்படி பெறலாம்.? முழு விபரங்களும் இங்கே..!!

Published: 20 Oct 2024, 1:06 PM |
Updated: 20 Oct 2024, 1:06 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்த உங்கள் பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழின் அங்கீகாரத்தைப் பெறுவது முக்கியம், ஏனெனில் இது உள்ளூர் அமைப்பிற்குள் ஆவணம் சட்டபூர்வமானது என்பதையும், இதனால் நாட்டில் கிடைக்கும் அனைத்து உரிமைகளையும் நன்மைகளையும் நீங்கள் அனுபவிக்க முடியும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.

ADVERTISEMENT

உங்கள் பிறப்புச் சான்றிதழை நாட்டிலுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களால் அங்கீகரிக்கப்படுவதை இந்த அங்கீகாரம் உறுதி செய்கிறது. எனவே, நீங்கள் நாட்டில் உள்ள எமிரேட்ஸ் ஹெல்த் சர்வீசஸ் (EHS) மற்றும் சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகம் (Mohap) மூலமாகவும் உங்கள் பிறப்புச் சான்றிதழின் அங்கீகரிக்கப்பட்ட நகலைப் பெறுவதற்கு கோரிக்கையை சமர்ப்பிக்கலாம்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே இருக்கும் குடிமக்கள், அவர்களின் குழந்தையுடைய பிறப்புச் சான்றிதழை அங்கீகரிக்க வேண்டும் என்றால், அதற்கான கோரிக்கையை நம்பிக்கையான ஒருவரை வைத்து கையாளலாம். அதேபோல், நீங்கள் ஒரு குடியிருப்பாளராக இருந்தால், உங்கள் சார்பாக செயல்முறையை கவனித்துக்கொள்ள உங்கள் தூதரகத்தையும் கோரலாம்.

ADVERTISEMENT

அமீரகத்தில் பிறப்புச் சான்றிதழின் அங்கீகரிக்கப்பட்ட நகலைக் கோருவது எப்படி என்பதைப் பின்வருமாறு பார்க்கலாம்:

யாரெல்லாம் சேவைக்கு விண்ணப்பிக்கலாம்: UAE குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு இந்த சேவை கிடைக்கிறது.

ADVERTISEMENT

Mohap இணையதளத்தில் எப்படி விண்ணப்பிப்பது?

நீங்கள் சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்-(mohap.gov.ae) மூலம் உங்கள் கோரிக்கையை தாக்கல் செய்யலாம்.

  • உங்கள் UAE பாஸைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
  • அதன் பிறகு, ‘Services’ என்பதைக் கிளிக் செய்யவும்
  • இப்போது, ‘Birth Certificate’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
  • அதையடுத்து, ‘Issue of an Authenticated Copy of Birth Certificate’ என்பதைக் கிளிக் செய்யவும்
  • பின்னர், உங்கள் பிறந்த தேதி மற்றும் உங்கள் Qaid எண் போன்ற தேவையான தகவல்களை நிரப்பவும்.

MoHAP ஆப்-ல் எப்படி விண்ணப்பிப்பது?

பின்வரும் படிகளைப் பின்பற்றி MoHAP செயலி மூலமாகவும் நீங்கள் கோரிக்கையை தாக்கல் செய்யலாம்:

  • உங்கள் UAE பாஸைப் பயன்படுத்தி பயன்பாட்டில் உள்நுழையவும்
  • அதில் ‘Services’ என்ற விருப்பத்தைத் தட்டவும்
  • பின்னர், ‘Issue of an Authenticated Copy of Birth Certificate’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
  • அடுத்தபடியாக, ‘Apply’ என்பதைத் தட்டவும்
  • அதைத் தொடர்ந்து, ‘Issue of an Authenticated Copy of Birth Certificate’ என்பதைத் தேர்ந்தெடுத்து,  ‘Start Service’ என்பதைத் தட்டவும்
  • இப்போது, உங்கள் பிறந்த தேதி மற்றும் உங்கள் Qaid எண் போன்ற தேவையான தகவல்களை நிரப்பவும்.

Qaid எண் என்பது பிறப்புப் பதிவு செயல்முறையை நிர்வகிக்கவும் பிறப்புச் சான்றிதழ்களை வழங்கவும் UAE வழங்கிய தனித்துவமான 10 இலக்க எண்ணாகும். குழந்தை பிறந்த மருத்துவ வசதி, குழந்தை பிறந்ததை அரசாங்கத்திற்கு தெரிவித்தவுடன் இந்த எண் குழந்தைக்கு ஒதுக்கப்படுகிறது.

மேற்கூறியவாறு Mohap இணையதளம் மற்றும் செயலியைப் பயன்படுத்துவது மட்டுமின்றி, EHS ஆல் இயக்கப்படும் பொது சுகாதார மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றும் உங்கள் அங்கீகரிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழின் நகலைக் கோரலாம். சுமூகமான செயல்முறையை உறுதிசெய்ய தேவையான அனைத்து ஆவணங்களும் உங்களிடம் இருப்பதை உறுதிசெய்யவும்.

  • தேவையான ஆவணங்கள்: அசல் பிறப்புச் சான்றிதழின் நகல் மற்றும் செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடி
  • கால அளவு: உங்கள் கோரிக்கையைச் செயல்படுத்த ஒரு வேலை நாள் மட்டுமே ஆகும்.
  • கட்டணம்: இந்த சேவைக்கு நீங்கள் 10 திர்ஹம்ஸ் மட்டுமே செலுத்த வேண்டும்.
  • சேவை நேரங்கள்: நீங்கள் எப்போது வேண்டுமானாலும் MoHAP இணையதளம் மற்றும் பயன்பாட்டின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழின் நகலைக் கோரலாம்.

எவ்வாறாயினும், நீங்கள் EHS ஆல் இயக்கப்படும் பொது சுகாதார மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல விரும்பினால், திங்கள் முதல் வியாழன் வரை காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை சென்று வருவதை உறுதிசெய்யவும். குறிப்பாக, வெள்ளிக்கிழமை, காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணிக்குள் சென்று பார்க்கவும். மேலும் தெளிவுபடுத்த 800-8877 என்ற எண்ணையும் அழைக்கலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel