ADVERTISEMENT

UAE: திடீரென பாதையை மாற்றியதால் பலமுறை பல்டி அடித்த கார்.. காவல்துறையின் எச்சரிக்கை வீடியோ..!!

Published: 3 Nov 2024, 9:28 AM |
Updated: 3 Nov 2024, 9:37 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அதிகாரிகள் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவது ஆகியவற்றை கருத்தில் கொண்டு, போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்குமாறு வாகன ஓட்டிகளை அவ்வப்போது அறிவுறுத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

மேலும், சாலை கேமராக்களில் பதிவாகும் விபத்துக் காட்சிகளை பகிர்ந்து ஓட்டுநர்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். அந்தவகையில், அபுதாபி காவல்துறை இரண்டு விபத்துகளின் கிளிப்களை சனிக்கிழமை பகிர்ந்து, வாகனங்கள் திடீரென பாதையில் இருந்து விலகுவதால் ஏற்படும் ஆபத்து குறித்து எடுத்துரைத்துள்ளது.

அபுதாபியின் சாலை கேமராக்களில் பதிவான ஒரு கிளிப்பில், நான்காவது பாதையில் சென்று கொண்டிருந்த ஒரு வெள்ளை நிற காரானது திடீரென இரண்டாவது பாதைக்கு மாறும்போது இரண்டாவது பாதையில் சென்று கொண்டிருந்த வேனைக் கவனிக்கத் தவறியதால் இரு வாகனங்களும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதே வீடியோவில், ஒரு கருப்பு நிற கார் அதிவேகமாகச் சென்று அதன் பாதையில் இருந்து திடீரென விலகிச் சென்றதால், சாலைத் தடைகளில் மோதி பலமுறை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் காட்சிகள் காண்போரை பதைபதைக்க வைக்கிறது. இந்த இரு காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

இவ்விரு சம்பவங்களைத் தொடர்ந்து, சாலை தெளிவாக உள்ளதா என்பதை உறுதி செய்யாத வரையில், திடீர் விலகல் மற்றும் முந்திச் செல்வதை தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளை அபுதாபி காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

திடீர் விலகல் என்பது 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் நான்கு பிளாக் பாயிண்ட்களுடன் தண்டிக்கப்படக்கூடிய கடுமையான போக்குவரத்து குற்றமாகும், அதே சமயம் தவறாக முந்திச் செல்வதற்கான அபராதம் குற்றத்தைப் பொறுத்து 600 திர்ஹமிலிருந்து 1,000 திர்ஹம் வரை செல்லலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel