ஐக்கிய அரபு அமீரகத்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்தில் ப்ரோபேஷன் காலத்தில் (probation period) பணிபுரியும் ஒரு ஊழியர் வேலையிலிருந்து வெளியேற விரும்பினால், அவர் மேற்கொள்ள வேண்டிய நடைமுறை என்ன? அவர்கள் முதலாளியிடம் நோட்டீஸ் காலத்தை (notice period) வழங்க வேண்டுமா? அமீரக சட்டத்தின் படி, நோட்டீஸ் பீரியட் விதிகளை அறிந்துகொள்வதன் மூலம், பின்னாளில் எந்தவொரு நிதிச் சிக்கல்களையோ அல்லது தொழிலாளர் தடையையோ எதிர்கொள்ளாமல் இருக்கலாம்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MOHRE), ப்ரோபேஷன் காலத்தில் (probation period) பணிபுரியும் ஊழியர் வேலையை விட்டுவிட திட்டமிட்டாலோ அல்லது அமீரகத்தில் இருந்து வெளியேறி சொந்த நாட்டுக்கு திரும்ப விரும்பினாலோ குறைந்தபட்சம் ஒரு மாதகால நோட்டீஸ் பீரியட் அவசியம் என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்திருந்தது.
எனவே, அமீரக தொழிலாளர் சட்டத்தின் படி, ஒரு நிறுவனத்தில் சோதனைக் காலத்தில் (probation period) பணிபுரியும் ஊழியர் நிர்ணயிக்கப்பட்ட notice period விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும்.
அதே போல் தற்போதைய வேலையை ராஜினாமா செய்து விட்டு புதிய வேலையில் சேர விரும்பும் ஒரு ஊழியர், தனது தற்போதைய முதலாளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே மின்னஞ்சல் மூலமாகவும் அல்லது எழுத்துப்பூர்வமாகவும் அறிவிப்பைக் கொடுக்க வேண்டும். இல்லையெனில், ஒரு புதிய முதலாளி தற்போதைய முதலாளிக்கு ஆட்சேர்ப்பு அல்லது ஒப்பந்த செலவுகளுடன் இழப்பீடு வழங்க வேண்டும். இது 2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணை-சட்ட எண். 33 இன் வேலைவாய்ப்பு உறவுகளின் ஒழுங்குமுறையின் பிரிவு 9 (3) க்கு இணங்க உள்ளது.
மேலும், 2022 ஆம் ஆண்டின் அமைச்சரவை தீர்மானம் எண்.1 இன் கட்டுரை 12(5) (b) 2021 ஆம் ஆண்டின் 33 ஆம் எண் ஃபெடரல் ஆணை-சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான வேலைவாய்ப்பு உறவுகளை ஒழுங்குபடுத்துதல் தொடர்பாக பின்வரும் நிபந்தனையின் கீழ் ஒரு ஊழியர் இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்:
அதாவது ப்ரோபேஷன் காலத்தில் வேலை ஒப்பந்தம் நிறுத்தப்பட்டால் அவர் நோட்டீஸ் பீரியட் அளிக்க தேவையில்லை. இருப்பினும், ஏதேனும் கூடுதல் ஏற்பாடுகளுக்கு வேலை ஒப்பந்தத்தின் விவரங்களை மதிப்பாய்வு செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel