துபாயின் வசதியான போக்குவரத்து முறைகளில் ஒன்றான துபாய் டிராம் துபாயில் தனது சேவையை துவங்கி 10 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) திங்களன்று துபாய் டிராமின் பத்தாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் போது, 2014 ஆண்டு தொடங்கப்பட்ட டிராம் சேவையில் தற்பொழுது வரை 60 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பயணித்துள்ளதாகவும், சுமார் 6 மில்லியன் கிலோமீட்டர்கள் துபாய் டிராம் பயணித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், துபாய் டிராம் நேரம் தவறாமையில் 99.9 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் அதிகாரம் கூறியுள்ளது. துபாயில் உள்ள பாம் ஜுமேரா, துபாய் நாலெட்ஜ் வில்லேஜ், துபாய் மீடியா சிட்டி, JBR மற்றும் துபாய் மெரினா போன்ற முக்கிய இடங்களைக் கடந்து செல்லும் இந்த டிராம், அல் சுஃபூஹ் சாலையில் உள்ள 11 நிலையங்களை இணைக்கிறது. இது அல் சுஃபுஹ் நிலையத்திலிருந்து ஜுமைரா லேக்ஸ் டவர்ஸ் ஸ்டேஷன் வரை பயணிக்க மொத்தம் 42 நிமிடம் எடுத்துக் கொள்கிறது.
இது குறித்து தெரிவிக்கையில் “துபாய் டிராம் ஒரு தடையற்ற மற்றும் இயற்கையான போக்குவரத்து அனுபவத்தை வழங்குகிறது, துபாயின் முக்கிய அடையாளங்களுக்கு வசதியான அணுகலை விரும்பும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது” RTA தெரிவித்துள்ளது. மேலும் துபாய் டிராம் கோல்டு, சில்வர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரத்யேக அறைகள் என மூன்று வகுப்புகளில் ஏழு பெட்டிகளை வழங்குகிறது.
ஒருங்கிணைந்த போக்குவரத்து
துபாய் மெட்ரோ, பொதுப் பேருந்துகள், டாக்ஸிகள் மற்றும் சைக்கிள் ஓட்டும் தடங்கள் உட்பட துபாய் டிராமை எமிரேட்டில் உள்ள மற்ற போக்குவரத்து முறைகளுடன் RTA தடையின்றி ஒருங்கிணைத்துள்ளது. எனவே, இது நகரம் முழுவதும் வசதியான மற்றும் அணுகக்கூடிய இயக்க அனுபவத்தை வழங்குகிறது.
அதுமட்டுமில்லாமல், ஸ்டேஷன்களில் தானியங்கி பிளாட்பார்ம் கதவுகள் கொண்ட முதல் டிராம் அமைப்பாக துபாய் டிராம் உலகை வழிநடத்துகிறது. இது ஐரோப்பாவிற்கு வெளியே மேல்நிலைக் கம்பிகள் இல்லாமல் , தரைமட்ட மின் விநியோக அமைப்பில் இயங்கும் முதல் டிராம் ஆகும்.
கட்டுப்பாட்டு மையம்
துபாய் டிராம் செயல்பாடுகள் டிராம் இயக்கம், இயக்கி செயல்திறன் மற்றும் இன்டர்செக்சனில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து சிக்னல்கள் உட்பட அத்தியாவசிய அமைப்புகளின் செயல்திறனை மேற்பார்வையிடும் ஒரு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தால் 24/7 கண்காணிக்கப்படுகிறது. பாதுகாப்பு கேமராக்கள் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் அதே வேளையில், கட்டுப்பாட்டு மையம் தடையில்லா சேவையை உறுதிசெய்ய, தொழில்நுட்ப சிக்கல்களுக்கும் விரைவாக பதிலளிக்கிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel