துபாயின் அல் ஹம்ரியா பகுதியில் உள்ள துறைமுகத்தில் இருக்கும் wharf என்று சொல்லக்கூடிய ஏற்றுமதி இறக்குமதி செய்யக்கூடிய இடத்தில் இருந்து கடலில் தவறி விழுந்த சரக்கு வாகனத்தை துபாய் துறைமுக காவல் நிலையத்தில் உள்ள கடல்சார் மீட்புத் துறையைச் சேர்ந்த டைவர்கள், பொது போக்குவரத்து மற்றும் மீட்புத் துறையுடன் இணைந்து மீட்டுள்ளனர்.
இது குறித்து கூறுகையில் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தும் போது துறைமுக காவல் நிலையத்தின் துணை இயக்குநர் கர்னல் அலி அப்துல்லா அல் குசிப் அல் நக்பி இது குறித்து கூறுகையில், சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காமல் நண்பர்களுடன் பேசுவதற்காக வாகனத்தை விட்டு வெளியேறியதாகவும், இதனால் வாகனம் நகர்ந்து கப்பல் துறை மேடையில் இருந்து கீழே விழுந்ததாகவும் விவரித்துள்ளார்.
குறிப்பாக, வாகனத்தின் டிரான்ஸ்மிஷனை “பார்க்” (P) மோடிற்கு மாற்றுவதில் ஓட்டுநர் தவறிவிட்டதாகவும், வாகனத்தைப் பாதுகாக்க ஹேண்ட்பிரேக்கை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் அல் நக்பி சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தர்பூசணிகளை ஏற்றிச் சென்ற இந்த வாகனம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, டைவர்கள் கடற்பரப்பில் குதித்து, பொது போக்குவரத்து மற்றும் மீட்புத் துறையின் கிரேனுடன் இணைக்கப்பட்ட கயிறுகளால் வாகனத்தைப் பாதுகாத்து, அதை வெற்றிகரமாக மீட்டு மீண்டும் துறைமுகத்தில் நிறுத்தியதாக அல் நக்பி தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தை அடுத்து, ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தும் போது தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறும், வெளியேறும் முன் அவை முழுமையாக பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுமாறும் அல் நக்பி கேட்டுக் கொண்டார். அத்துடன் வாகனங்களின் இயந்திர நிலையை சரிபார்த்தல், வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையுடன் செயல்படுதல் மற்றும் போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பொது செயல்பாட்டுத் துறையின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை அவசர காலங்களில் 999 என்ற எண்ணில் அல்லது அவசரமற்ற சூழ்நிலைகளுக்கு 901 அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அவர் பொதுமக்களை ஊக்குவித்தார். கூடுதலாக, கடல்சார் பயனர்கள் “Sail Safely” சேவையைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினார், இது சம்பவங்களைப் புகாரளிப்பதற்கும் இருப்பிடங்களைக் குறிப்பதற்கும் உதவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel