ADVERTISEMENT

நவம்பர் 29 முதல் துபாயில் பல பேருந்து வழித்தடங்களில் மாற்றம்.. மூன்று புதிய பேருந்து சேவைகளும் அறிவிப்பு..!!

Published: 26 Nov 2024, 4:49 PM |
Updated: 26 Nov 2024, 8:38 PM |
Posted By: Menaka

துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), வருகின்ற நவம்பர் 29, வெள்ளிக்கிழமை முதல் சத்வா பஸ் நிலையத்தை குளோபல் வில்லேஜ் பூங்காவுடன் நேரடியாக இணைக்கும் பேருந்து வழித்தடம் 108 உட்பட மூன்று புதிய பேருந்து வழித்தடங்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ரூட் 108 வெள்ளி, சனி, ஞாயிறு, பொது விடுமுறை நாட்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் போது இயக்கப்படும். மதியம் 2 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை கிடைக்கும் இந்த சேவையானது தினசரி ஒரு திசைக்கு 11 சவாரிகள் செல்லும் என்றும், பயண நேரம் 60 நிமிடங்கள் வரை ஆகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மற்ற இரண்டு புதிய வழிகள் F63 மற்றும் J05 ஆகும். ரூட் F63 என்பது துபாய் மெட்ரோ ஃபீடர் சேவையாகும், இது அல் கலீஜ் ஸ்ட்ரீட் மற்றும் நைஃப் ஸ்ட்ரீட் வழியாக அல் ராஸ் மெட்ரோ நிலையத்தை யூனியன் பேருந்து நிலையத்துடன் இணைக்கும். அதே சமயம் ரூட் J05 மிரா சமூகத்திற்கும் துபாய் ஸ்டுடியோ சிட்டிக்கும் இடையே நெஷாமா டவுன்ஹவுஸ் வழியாக ஒரு இணைப்பை வழங்கும்.

ADVERTISEMENT

மாற்றியமைக்கப்பட்டுள்ள பேருந்து வழித்தடங்கள்

இதுமட்டுமின்றி, நவம்பர் 29 ஆம் தேதி, RTA-வானது பயணிகளின் தினசரி பயணங்களை அதிகரிக்க பல பேருந்து வழித்தடங்களை மாற்றியமைக்கிறது, இதன் மூலம் வசதியான பயணங்களை உறுதி செய்கிறது. அதன் படி, அபு ஹைல் பேருந்து நிலையம் மற்றும் யூனியன் பேருந்து நிலையம் இடையே இரு திசைகளிலும் செயல்படும் வகையில் வழித்தடம் 5 மாற்றியமைக்கப்படும், எனவே, அது இனி அல் ராஸ் மெட்ரோ நிலையத்திற்கு சேவை செய்யாது.

வீடியோ செய்திகளுக்கு எங்களின் Youtube பக்கத்தை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளவும்…

ADVERTISEMENT

மேலும், பிசினஸ் பே மெட்ரோ ஸ்டேஷனில் முடிவடையும் வகையில், இரண்டு திசைகளில் செயல்படும் வகையில் ரூட் 14 சரிசெய்யப்படும். அத்துடன் அல் குபைபா பேருந்து நிலையத்திற்குப் பதிலாக கராமா பேருந்து நிலையத்தில் முடிவடையும் வகையில் ரூட் 33 சுருக்கப்படும்.

கூடுதலாக, ஜெபல் அலி பேருந்து நிலையத்தின் திசையில் பிசினஸ் பே பகுதிக்கும், இரு திசைகளிலும் துபாய் மல்டி கமாடிட்டிஸ் சென்டருக்கு (DMCC) சேவை செய்வதற்கும் ரூட் 91 சரிசெய்யப்படும்.

அரேபியன் ராஞ்சஸ் மற்றும் துபாய் புரொடக்ஷன் சிட்டி இடையே பயணத்தை விரைவுபடுத்துவதற்காக J02 பாதை குறைக்கப்படும். இதேபோல், துபாய் ஸ்டுடியோ சிட்டியில் நிறுத்தங்களைக் குறைக்கும் அதே வேளையில், ஸ்போர்ட்ஸ் சிட்டியையும் சேர்க்கும் வகையில் ரூட் J04 சரிசெய்யப்படும்.

மேலும், அல் ஜுர்ஃப் ஹைட்ஸ் குழுமத்திற்கு சேவை செய்யும் வகையில் ரூட் F38,  எத்திஹாட் மால் உள்ளடங்கும் வகையில் F39 பாதையும்  சரிசெய்யப்படும். அல் குபைபா பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் DMCC மெட்ரோ ஸ்டாப்பில் சேவை செய்யும் வகையில் ரூட் X92 மாற்றியமைக்கப்படும் மற்றும் துபாய் இன்வஸ்ட்மென்ட் பார்க்கில் நிறுத்தங்கள் குறைக்கப்படும்.

இவைதவிர, RTA பின்வரும் 30 பேருந்து வழித்தடங்களில் மேம்பாடுகளை மேற்கொள்ளும், அதாவது: 7, 13D, 14, 20A, 21A, 21B, 30, 32C, 33, 34, 43, 44, 63E, 67, 91, DH1, E700, F05, F07, F26, F23, F38, F46 J01, J02, J04, J05 மற்றும் X92 ஆகிய வழித்தடங்கள் வருகை நேரங்களுடன் சிறப்பாகச் சீரமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel