ஐக்கிய அரபு அமீரகத்தின் 53 வது தேசிய தின கொண்டாட்டத்தின் போது, அல் அய்ன் சிட்டியானது மிக நீளமான வானவேடிக்கையை நிகழ்த்தி (longest chain of fireworks) கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளது. அல் அய்ன் நகர முனிசிபாலிட்டியால் நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்டமான வானவேடிக்கை நிகழ்ச்சி டிசம்பர் 2, 2024 அன்று 11.1 கிமீ தூரத்திற்கு நிகழ்த்தப்பட்டுள்ளது.
51 தளங்களில் இருந்து ஏவப்பட்ட பட்டாசுகள் முந்தைய கின்னஸ் சாதனையை முறியடிக்க வெறும் 50 வினாடிகள் மட்டுமே ஆனதாக முனிசிபாலிட்டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே ஆண்டில், கடந்த பிப்ரவரி மாதம் மிகப்பெரிய பூங்கொத்துக்கான சாதனையை அல் அய்ன் சிட்டி படைத்திருந்தது. தற்போது அல் அய்ன் படைத்த இரண்டாவது சாதனை இதுவாகும்.
இதற்கு முன்னதாக, ஜனவரி 1, 2024 அன்று அமீரகம் முழுவதும் 2024 புத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற சமயத்தில் ராஸ் அல் கைமா இரண்டு கின்னஸ் உலக சாதனைகளை முறியடித்தது. மொத்தம் 5.8 கிமீ நீளத்திற்கான ‘Longest chain of aquatic floating fireworks’ மற்றும் மொத்தம் 2 கிமீ நீளத்திற்கான ‘Longest straight-line drones display’ ஆகிய இரண்டு தலைப்புகளில், இடைவிடாத எட்டு நிமிட வானவேடிக்கை காட்சிகள் மற்றும் ட்ரோன் காட்சிகளை நிகழ்த்தி இந்த சாதனையை ராஸ் அல் கைமா படைத்திருந்தது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel