ADVERTISEMENT

அமீரகத்தில் கேம்பிங் செல்ல திட்டமா?? பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் என்ன?? அனைத்தும் இங்கே…

Published: 9 Dec 2024, 9:00 PM |
Updated: 10 Dec 2024, 9:22 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் பரந்து விரிந்த பாலைவனத்திலோ அல்லது திறந்த வெளியிலோ கூடாரம் அமைத்து, நெருப்பு மூட்டி வானில் தெரியும் நட்சத்திரங்களை ரசிப்பது கேம்பிங் பிரியர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கும். இத்தகைய அலாதியான அனுபவத்தைப் பெற அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டுமா, எந்த இடங்களில் முகாமிட அனுமதி உண்டு போன்ற பல்வேறு கேள்விகள் நம்மில் சிலருக்கு இருக்கலாம்.

ADVERTISEMENT

அவர்களுக்கான பதில் மற்றும் அமீரகத்தில் முகாமிடுவதற்கான வழிகாட்டிகள் என்ன என்பது பற்றிய விபரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம். அமீரகத்தில் பெரும்பாலான இடங்கள் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அணுகல் இலவசம் என்றாலும், நீங்கள் ஒரு நீண்ட கால கூடாரத்தை அமைக்க திட்டமிட்டால், துபாயில் அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.

எப்போது அனுமதி தேவை?

அமீரகத்தில் குளிர்கால முகாம் பருவம் பெரும்பாலும் அக்டோபர் பிற்பகுதியில் இருந்து ஏப்ரல் வரை தொடங்குகிறது. துபாய் முனிசிபாலிட்டியின் படி, வார இறுதி நாட்களில் பாலைவனத்தில் கூடாரம் அமைத்து முகாமிட  முன் அனுமதி தேவையில்லை, ஆனால்  நீண்ட கால முகாம் பயணங்கள் வரும்போது சில விதிகள் மற்றும் அனுமதி தேவைகள் உள்ளன. நீண்ட நேரம் முகாமுக்குச் செல்பவர்கள் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும், அதற்கான விவரங்கள் பின்வருமாறு:

ADVERTISEMENT

ஒரே இரவில் எங்கு முகாமிடலாம்?

ஒரு கூடாரத்தை அமைப்பதற்கான இடத்தைக் கண்டுபிடிப்பதற்கான எளிதான வழிகளில் ஒன்று முக்கிய நெடுஞ்சாலைகளாகும், ஏனெனில் வசதிகளை அணுகுவது மற்றும் தேவைப்படும்போது உதவியை அணுகுவது எளிது. நீங்கள் பாலைவனத்தில் ஓட்டுவதில் பயிற்சி பெற்றிருந்தால் மட்டுமே பாலைவனத்திற்குள் ஆழமாகச் செல்ல வேண்டும்.

அமீரகத்தில் இரவு நேர முகாம்களுக்கான பிரபலமான இடங்கள்:

1. அல் குத்ரா லேக்ஸ், துபாய்
2. வாடி ஷவ்கா, ராஸ் அல் கைமா
3. சுஹைலா ஏரி, ஹத்தா
4. அல் ஜுரூஃப், ஃபுஜைரா
5. அல் வத்பா லேக் கேம்ப், அபுதாபி

ADVERTISEMENT

நிபந்தனைகள்

அதிகாரம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, உங்கள் கூடாரத்தின் தளமானது ஓடை, பள்ளத்தாக்குகள் போன்ற தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடாது, அல்லது ஒரு குன்றின் அருகில் இருக்கக்கூடாது, மேலும் கூடாரத்தின் தளம் ஒரு குன்றின் அடிவாரத்தில் கட்டாயம் அமைக்கப்படக்கூடாது.

சமையல் நிலையங்கள் அல்லது விறகு எரிக்கப்படும் இடங்களிலிருந்து வெகு தொலைவில் கூடாரங்கள் அமைக்கப்பட வேண்டும், மேலும் எரிபொருள் கிடங்குகள், எரிபொருள் சேமிப்பு தொட்டிகள், ஜெனரேட்டர்கள் மற்றும் மின்கம்பங்களில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கூடாரங்கள் நீர் அலை மட்டத்திலிருந்து போதுமான உயரமான பகுதிகளில் இருக்க வேண்டும் என்றும் வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

இது தவிர, தேள், எறும்புகள் மற்றும் பிற பூச்சிகளால் பாதிக்கப்படக்கூடிய சேற்றுத் தளங்களைத் தவிர்க்க முகாம் செய்பவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன்  கூடாரத்தில் ஈரமான சூழலை உருவாக்குவதைத் தவிர்க்க கற்கள் மற்றும் பள்ளங்கள் இல்லாத சமதளமான நிலங்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடல் மட்ட உயர்வின் விளைவாக நீர் தோன்றக்கூடிய ஆழமற்ற அல்லது அரை சதுப்பு நிலப்பகுதிகளைத் தவிர்ப்பதை வழிகாட்டுதல்கள் மேலும் வலியுறுத்துகின்றன.

கூடாரங்களில் தீ விபத்து ஏற்படாமல் எவ்வாறு தவிர்ப்பது

  • அனைத்து ஒளி மூலங்களும் விளக்குகளும் கூடாரத்திலிருந்து குறைந்தபட்சம் 50 செமீ தொலைவில் வைக்கப்பட வேண்டும்.
  • கூடாரத்திற்குள் பார்பிக்யூ மற்றும் நிலக்கரி போன்ற சூடான உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம்.
  • கூடாரத்திற்கு அருகில் அல்லது உள்ளே தீயை அணைக்கும் கருவி இருப்பதை உறுதி செய்யவும்.
  • கூடாரத்திற்குள் மெழுகுவர்த்திகள் அல்லது லைட்டர்கள் போன்ற திறந்த தீப்பிழம்புகளைப் பயன்படுத்த வேண்டாம்.
  • விறகுகள் எந்த நேரத்திலும் கூடாரத்திலிருந்து குறைந்தபட்சம் 15 அடி தூரத்தில் சேமிக்கப்பட வேண்டும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel