ADVERTISEMENT

துபாயில் அதிகரிக்கும் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு.. 740க்கும் மேற்பட்ட EV சார்ஜிங் நிலையங்களை நிறுவிய ஆணையம்!!

Published: 18 Dec 2024, 5:48 PM |
Updated: 18 Dec 2024, 6:16 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம் (Dewa) எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்வதற்கு வசதியாக எமிரேட்டின் சாலைகளில் 740க்கும் மேற்பட்ட EV சார்ஜிங் நிலையங்களை நிறுவியுள்ளது. 2024 அக்டோபர் நிலவரப்படி, எமிரேட் முழுவதும் உள்ள 34,970க்கும் அதிகமான எலெக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுக்கொள்வதில் துபாயின் நிலையான வளர்ச்சியை ஆதரிப்பதற்காக அதிவேக, வேகமான, பொது மற்றும் சுவர்-பெட்டி (wall-box) சார்ஜர்களைக் கொண்ட EV கிரீன் சார்ஜர் நெட்வொர்க்கை வழங்குவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

Dewaவின் படி, வாகன ஓட்டிகள் ஆணையத்தின் இணையதளம், ஸ்மார்ட் ஆப்ஸ் மற்றும் பிற 14 டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்கள் மூலம் இந்த சார்ஜிங் நிலையங்கள் இருக்கும் இடங்களை வசதியாகக் கண்டறியலாம் என கூறப்பட்டுள்ளது.

2014 இல் ஆணையத்தால் தொடங்கப்பட்ட EV கிரீன் சார்ஜர் முயற்சியானது, EV சார்ஜிங் நிலையங்களுக்கு ஒரு முன்னோடி உள்கட்டமைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது துபாய் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் நிலையான அதிகரிப்புக்கு ஆதரவளிப்பதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், அமீரக அரசாங்கம் 2050 ஆம் ஆண்டிற்குள் அதன் சாலைகளில் 50 சதவீத கார்களை எலெக்ட்ரிக் கார்களாக மாற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளது என்று Dewaவின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சயீத் முகமது அல் டயர் தெரிவித்துள்ளார்.

மேலும், துபாயில் EV சார்ஜிங் உள்கட்டமைப்பின் மேம்பாடு மற்றும் செயல்பாட்டிற்காக சமீபத்தில் தொடங்கப்பட்ட உரிமக் கட்டமைப்பு, பசுமை இயக்கத்தை ஊக்குவிப்பதிலும், 2050க்குள் துபாயின் நிகர-பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற இலக்கை அடைவதிலும் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

2014 முதல் செப்டம்பர் 2024 இறுதி வரை, இந்த முன்முயற்சியின் சேவைகளால் மொத்தம் 16,828 வாடிக்கையாளர்கள் பயனடைந்துள்ளதாகவும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சுமார் 31,674 மெகாவாட் மணிநேர மின்சாரத்தை ஆணையம் வழங்கியதாகவும் Dewa கூறியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், Dewa துபாயில் EV சார்ஜிங் நிலையங்களுக்கான முதல் இரண்டு தனியார் சார்ஜ் பாயிண்ட் ஆபரேட்டர் (CPO) உரிமங்களை டெஸ்லா மற்றும் UAEV க்கு வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel