ADVERTISEMENT

UAE லாட்டரியின் முதல் ‘ஸ்கிராட்ச் கார்டு’ வெற்றியாளர் அறிவிப்பு..!! 100,000 திர்ஹம்ஸ் பரிசை வென்ற முதல் நபர்..!!

Published: 19 Dec 2024, 1:43 PM |
Updated: 19 Dec 2024, 1:43 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரே ஒழுங்குபடுத்தப்பட்ட லாட்டரியான UAE லாட்டரி நேற்று முன்தினம் செவ்வாயன்று அதன் முதல் ஸ்கிராட்ச் கார்டு வெற்றியாளரை அறிவித்துள்ளது. அதில் பாகிஸ்தான் நாட்டைச் சேரந்த மிர்சா ஒமைர் பைக் (Mirza Omair Baig) என்பவர் ‘Golden 7 Scratch Card’ மூலம் 100,000 திர்ஹம்ஸ் ரொக்கப் பரிசை வென்ற முதல் வெற்றியாளர் என UAE லாட்டரி அதன் சமூக ஊடகக் கணக்கில் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதேபோல், இந்த டிராவில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் 1 மில்லியன் திர்ஹம் வரை வெல்வதற்கான ஸ்கிராட்ச் கார்டுகளை வாங்கலாம். இந்த கார்டுகளுக்கான கட்டணங்கள் 5 திர்ஹம்ஸில் இருந்து தொடங்குகின்றன, இது 50,000 திர்ஹம்ஸ் வரை வெல்லும் வாய்ப்பையும் பங்கேற்பாளர்களுக்கு வழங்குகிறது.

மேலும், டிராவின் 10 திர்ஹம்ஸ் கார்டுகளுக்கு 100,000 திர்ஹம்ஸ் உயர் பரிசு, 20 திர்ஹம்ஸ் மதிப்பிலான ஸ்கிராட்ச் கார்டுகளுக்கு 300,000 திர்ஹம்ஸ் ரொக்கப்பரிசு, 50 திர்ஹம்ஸ் மதிப்பிலான கார்டுகள் மூலம் அதிகபட்ச தொகையான 1 மில்லியன் திர்ஹம்ஸ் கிராண்ட் பரிசு என பங்கேற்பாளர்கள் பல பரிசுகளை வெல்லும் வாய்ப்பை ஸ்கிராட்ச் கார்டுகள் மூலம் பெறலாம்.

ADVERTISEMENT

கடந்த டிசம்பர் 14ம் தேதி, சனிக்கிழமை மாலை நடைபெற்ற UAE லாட்டரியின் முதல் டிராவில் வெற்றியாளர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்படுவதைக் காண ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் நேரலையில் இணைந்தனர். அப்போது முதல் UAE லாட்டரி டிராவின் ஜாக்பாட் பரிசான 100 மில்லியன் திர்ஹம்ஸ் கிராண்ட் பரிசு மற்றும் இரண்டாவது பரிசான 1 மில்லியன் திர்ஹம்ஸ் தொகையை வெல்லும் அதிர்ஷ்டம் யாருக்கும் கிடைக்கவில்லை. ஆனால், 28,000 க்கும் அதிகமானோர் தலா 100 திர்ஹம்ஸ் தொகையை வென்றதாக அறிவிக்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் லாட்டரி செயல்பாடுகளை நடத்துவதற்கு கேமிங் ஒழுங்குமுறை ஆணையத்திடம் உரிமம் பெற்று, ‘The Game LLC’ என்ற நிறுவனத்தால் இயக்கப்படும் UAE லாட்டரி டிராவானது பல பரிசுகளை வழங்குகிறது. மேலும் பங்கேற்பாளர்கள் இதில் தங்களின் சொந்த வெற்றி எண்களைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது கணிணி உதவியுடன் சீரற்ற எண்களையும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel