ADVERTISEMENT

UAE: தொடர்ச்சியாக நிராகரிக்கப்படும் இந்தியர்களின் விசிட் விசா.. என்னதான் காரணம்..??

Published: 24 Dec 2024, 8:57 AM |
Updated: 24 Dec 2024, 8:57 AM |
Posted By: Menaka

விசிட் விசாவில் அமீரகத்திற்கு வர விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு, அமீரக அரசாங்கம்   சமீபத்தில் புதிய மற்றும் கடுமையான தேவைகளை அறிமுகப்படுத்தியது. இதனடிப்படையில், நாட்டின் இமிகிரேஷன் அதிகாரிகள் நாட்டிற்கு விசிட் விசாவில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் போதுமான நிதி, ஹோட்டல் தங்குமிடம் அல்லது வசிப்பிடச் சான்று மற்றும் சுற்றுலா விசா காலாவதியாகும் முன் ரிட்டர்ன் டிக்கெட்டை எடுத்துச் செல்வதை கட்டாயமாக்கியுள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிற தெற்காசிய நாடுகளில் உள்ள பல ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள் சமீபகாலமாக UAE விசிட் விசாக்கள் நிராகரிக்கப்படுவதாகவும், தொடர் நிராகரிப்புகளுக்கு என்ன காரணம் என்றும் கேள்வியெழுப்பி வந்தன.

இதற்கு பதிலளித்துள்ள பயணத் துறை நிர்வாகிகள், விண்ணப்பதாரர்கள் ரிட்டர்ன் டிக்கெட், ஹோட்டல் முன்பதிவு போன்ற அமீரகத்தின் சட்டத் தேவைகளை பூர்த்தி செய்யாதது மற்றும் நிதி ஆதாரம் இல்லாதது போன்ற காரணங்களால் பெரும்பாலான விசிட் விசாக்கள் நிராகரிக்கப்படுகின்றன என்று  கூறுகின்றனர்.

ADVERTISEMENT

இது குறித்து பயண முகவர்கள் கூறுகையில்,  “ஐக்கிய அரபு அமீரகம் ஒரு எளிதான நாடு, ஏனெனில் கட்டுப்பாடுகள் மிகவும் குறைவாக உள்ளன. ஆனால் அதிகளவிலான மக்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்து வேலை தேடுகிறார்கள். அமீரக அரசாங்கம் இந்த இரண்டு வகைகளையும் பிரிக்க விரும்புகிறது, எனவே, உண்மையான சுற்றுலாப் பயணிகள் வந்து, இந்த அழகான நாட்டைப் பார்த்துவிட்டு, விசிட் விசா காலாவதியாகும் முன் வெளியேற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்” என்று விளக்கியுள்ளார்.

அவரது கூற்றுப்படி, நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் தரத்தை உறுதி செய்வதற்காக, அமீரகம் மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற வளர்ந்த நாடுகள், நாட்டின் விசிட் விசாவைப் பெற சுற்றுலாப் பயணிகள் சந்திக்க வேண்டிய சில சட்டத் தேவைகளை அறிவிப்பதாகக் கூறப்படுகிறது. துபாய்க்கு ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். குறிப்பாக, ஜனவரி-ஜூலை 2024 இல், துபாய் சுமார் 10.62 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவேற்றது, இது 8 சதவீதம் அதிகம் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

விசாக்கள் ஏன் நிராகரிக்கப்படுகின்றன?

அமீரகத்திற்கு விசிட் விசா பெற பலர் விரும்பும் நிலையில், போலி விமான டிக்கெட்கள் மற்றும் ஹோட்டல் முன்பதிவுகளை வழங்குவதே விசா நிராகரிப்புக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்கள் ஆகும் என்றும், இது விசா செயல்பாட்டின் போது சரிபார்ப்பு சோதனைகளில் தோல்வியடைகிறது என்றும் பயண முகவர்கள் கூறுகின்றனர்.

அத்துடன்  முழுமையடையாத அல்லது விடுபட்ட ஆதார ஆவணங்களும் சிக்கலுக்கு பங்களிக்கின்றன என்று தெரிவித்ததோடு, தங்கள் விசாக்கள் காலாவதியான பிறகும் நாட்டில் தங்கும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய விண்ணப்பதாரர்கள் மீது அதிகாரிகள் அதிகளவில் விழிப்புடன் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகம் கொஞ்சம் மெத்தனமாக இருந்தது. ஆனால் இப்போது பயண நிறுவனங்கள் பெற்றோர்கள், உறவினர்கள் அல்லது உடன்பிறந்தவர்களை விசிட்டில் அமீரகத்திற்கு அழைக்கும் போது, ​​உண்மையான ஹோட்டல் முன்பதிவுகள் அல்லது சுற்றுலாப் பயணிகளின் நேரடி உறவினர்களின் குத்தகை ஒப்பந்தங்களை நிதிச் சான்றுடன் இணைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

அவரது அறிவுரையின் படி,  செல்லுபடியாகும் ரிட்டர்ன் டிக்கெட், தங்குமிடச் சான்று (ஹோட்டலில் தங்கியிருந்தாலோ அல்லது உறவினரின் இடத்திலோ) மற்றும் போதுமான பணம் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். முக்கியமாக, சுற்றுலாவசிகள் நாட்டில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ள முறையான நாட்களின்படி நாட்டை விட்டு வெளியேற வேண்டும், இதனால் அவர்கள் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச்  வர முடியும்.

நம்பகமான பயண நிறுவனம்

எல்லாவற்றிற்கும் மேலாக, புகழ்பெற்ற மற்றும் எமிரேட்ஸில் உள்ள விசாக்கள் மற்றும் குடியேற்ற சேவைகள் தொடர்பான துல்லியமான தகவல்களை வழங்கக்கூடிய ஒரு பயண நிறுவனத்தை அணுகுமாறு பயண முகவர்கள் அறிவறுத்துகின்றனர். மேலும் இமிகிரேஷன் அமைப்புக்கு நீங்கள் உண்மையான ஆவணங்களை வழங்கினால், அதிகாரிகள் விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் விசிட் விசா பெற்று அமீரகத்திற்கு வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Link: Khaleej Tamil Whatsapp Channel