இன்னும் ஒரு வாரத்தில் வரவிருக்கும் 2025 புத்தாண்டை ராஸ் அல் கைமா எமிரேட்டில் கொண்டாடவும், அல் மர்ஜான் தீவில் நடக்கவுள்ள பிரம்மாண்டமான வானவேடிக்கை நிகழ்சிகளை கண்டுகளிக்கவும் திட்டமிடும் அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு ராஸ் அல் கைமா காவல்துறை மற்றும் எமிரேட்டின் சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (RAKTDA) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து கடந்த டிசம்பர் 17 அன்று வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பில், ராஸ் அல் கைமாவில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களைக் கண்டுகளிக்க தயாராகி வருபவர்கள், முதலில் உங்கள் வாகனத்தை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஸ் அல் கைமா காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, செல்லுபடியாகும் பார்க்கிங் பெர்மிட் உள்ள வாகனங்கள் மட்டுமே அல் மர்ஜான் தீவிற்கு செல்ல அனுமதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, உங்கள் காரை விரைவில் பதிவு செய்வது நல்லது.
அல் மர்ஜான் தீவுக்கான அணுகல்:
• முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மட்டுமே தீவிற்குள் நுழைய அனுமதிக்கப்படும்.
• டிசம்பர் 31 அன்று பிற்பகல் 2 மணிக்குப் பிறகு தீவிற்குள் நுழையும் வாகனங்கள் செல்லுபடியாகும் பதிவு அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.
• தீவில் உள்ள ஹோட்டல்களில் தங்கும் விருந்தினர்கள் அல்லது உணவகங்களில் உணவருந்தும்போது, செயல்முறையை முடிக்க அவர்களின் முன்பதிவு வழங்குநரிடமிருந்து சிறப்புப் பதிவு இணைப்பைப் பெறுவார்கள்.
நியமிக்கப்பட்ட பார்க்கிங் இடங்கள்:
• ஜுல்பார்: 12,000 பார்க்கிங் இடங்கள்.
• ஜெபல் யானாஸ்: 6,000 பார்க்கிங் இடங்கள்.
• ஜெபல் ஜெய்ஸ்: 5,000 பார்க்கிங் இடங்கள்.
• அல் ராம்ஸ்: 3,000 பார்க்கிங் இடங்கள்.
• தயா: 2,000 பார்க்கிங் இடங்கள்.
பதிவு செய்வது எப்படி
முதலில் www.raknye.com என்ற இணையதளத்திற்குச் சென்று முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Register for Parking’ என்பதைக் கிளிக் செய்யவும்.
அடுத்து, பின்வரும் விவரங்களுடன் படிவத்தை நிரப்பவும்:
• முழு பெயர்
• மொபைல் எண்
• மின்னஞ்சல் முகவரி
• வாகனத்தின் பதிவு எண்
• இருப்பிடத்திற்கு வருவதற்கான மதிப்பிடப்பட்ட நேரத்தை உள்ளிடவும்.
இறுதியாக, ‘Register’ என்பதைக் கிளிக் செய்யவும். சமர்ப்பித்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் வாட்ஸ்அப் மூலம் பார்க்கிங் விவரங்கள் மற்றும் வருகைக்கான வழிமுறைகளுடன் உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள். பார்க்கிங் இடங்கள் கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் உங்களுக்கான இடம் ஒதுக்கப்படும். மேலும் இதற்கு இலவசமாக அனுமதி பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel