ADVERTISEMENT

டெல்லி வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

Published: 28 Feb 2020, 7:42 AM |
Updated: 7 Mar 2020, 8:11 PM |
Posted By: jesmi

டெல்லி வன்முறையில் சிஏஏ(CAA) எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாஹீன்பாக் போராட்டத்தைத் தொடர்ந்து ஜாஃபராபாத், மோஜ்பூர் உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

ADVERTISEMENT

இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாஃப்ராபாத், ஷாஹீன்பாக், மோஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வன்முறையின் போது ஏராளமான வாகனங்கள் தீ வைத்து கொழுத்தப்படடன.

தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், டெல்லி வன்முறை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பலரது உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாததால், அவை மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

டெல்லி வன்முறையில்  பாதிக்கப்பட்டவர்களுக்கும், இறந்தவர்களுக்கும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இழப்பீடு அறிவித்துள்ளார். மேலும், டெல்லி வன்முறை குறித்து எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வன்முறை பாதித்த பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பாதுகாப்புப்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.