ADVERTISEMENT

வேலைவாய்ப்பு சட்டத்தில் மாற்றத்தை அறிவித்துள்ள அபுதாபி.. ஏப்ரல் 1 முதல் அமல்..!!

Published: 9 Jan 2025, 2:14 PM |
Updated: 9 Jan 2025, 2:31 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உள்ள அபுதாபியின் சர்வதேச நிதி மையத்தின் (ADGM) பதிவு ஆணையமானது (RA), முதலாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு  அவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து அதிக தெளிவை வழங்கும் தொலைதூர தொழிலாளர்கள் தொடர்பான புதிய சட்டங்களை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

முதலாளிகளுக்கு அவர்களின் கொள்கைகள், வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் மற்றும் பிற வேலைவாய்ப்பு தொடர்பான விஷயங்களை தேவைகளுடன் சீரமைக்க போதுமான நேரத்தை வழங்குவதற்காக இந்த விதிமுறைகள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வேலைவாய்ப்பு விதிமுறைகள், தொலைதூர பணியாளர்களை வேலைக்கு அமர்த்தவும் மேலும் நெகிழ்வான பணி ஏற்பாடுகளை அனுமதிக்கவும் நிறுவனங்களுக்கு உதவும் என்று கூறப்படுகிறது. புதிய சட்டத்தின்படி, தொலைதூர வேலைகளைச் செய்வதற்குத் தேவையான தொழில்நுட்ப உபகரணங்களை முதலாளி ஊழியர்களுக்கு வழங்குவார் மற்றும் பராமரிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

அதே போல் வேலை ஒப்பந்தம் ஊழியர் தொலைதூரத்தில் உள்ளவர் என்பதைக் குறிப்பிட வேண்டும் என்றும் தொலைதூர பணியாளர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் பணி அனுமதி, ரெசிடென்ஸ் விசா மற்றும் அடையாள அட்டைகளை பெறுதல், பராமரித்தல் மற்றும் கட்டணம் செலுத்துதல் ஆகியவை நிறுவனங்களின் பொறுப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுதிநேர ஊழியர்களுக்கு, அவர்களின் வேலை ஒப்பந்தம் ஒரு நாளைக்கு எட்டு வேலை மணி நேரங்களுக்குள்ளாகவோ அல்லது வாரத்திற்கு ஐந்து வேலை நாட்களுக்கு குறைவாகவோ இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளை வழங்குகிறது.

மேலும், ADGM ஆல் கட்டுப்படுத்தப்படும் அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த புதிய விதிகள் பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒரு தொலைதூர பணியாளர் அமீரகத்திற்கு உள்ளேயோ அல்லது அமீரகத்திற்கு வெளியிலோ வசிக்கலாம், ஆனால் அவருடைய சாதாரண வேலை செய்யும் இடம் அந்த நிறுவனமாக இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel