ADVERTISEMENT

UAE வழங்கும் 11 வகையான ஒர்க் பெர்மிட்: வேலை தேடுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முழு விபரங்களும் இங்கே…

Published: 20 Jan 2025, 9:27 AM |
Updated: 20 Jan 2025, 3:08 PM |
Posted By: Menaka

நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்ய விரும்புகிறீர்களா? அமீரகத்தில் உள்ள தனியார் துறையைப் பொறுத்தவரை, உங்கள் நிறுவனம் அமீரகத்தில் இருந்தால் (freezone அல்லாமல்), நீங்கள் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MOHRE) வழங்கும் பணி அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.

ADVERTISEMENT

அந்த வகையில் MOHRE, ஃப்ரீலான்ஸ் வேலை முதல் தற்காலிக வேலை வரை வேலை தேடுபவர்களுக்கு பல்வேறு வகையான பணி அனுமதிகளை வழங்குகிறது. மேலும், தனிப்பட்ட நபர் விண்ணப்பிக்கக்கூடிய ஃப்ரீலான்ஸ் அனுமதியைத் தவிர, மற்ற பணி அனுமதிகள் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தால் விண்ணப்பிக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. வேலை அனுமதி (நாட்டிற்கு வெளியில் இருந்து ஒரு தொழிலாளியை பணியமர்த்துதல்)

நாட்டிற்கு வெளியில் இருந்து ஒரு தொழிலாளியை வேலைக்கு அமர்த்த வேண்டுமெனில், நிறுவனங்கள் இந்த பணி அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அமீரக தொழிலாளர் சட்டத்தின் படி, தொழிலாளரின் ரெசிடென்ஸ் விசாவிற்கு விண்ணப்பித்தல், மருத்துவ பரிசோதனை செய்தல், எமிரேட்ஸ் ஐடி கார்டு, லேபர் கார்டு ஆகியவற்றைப் பெறுதல் மற்றும் தொழிலாளர் அமீரகத்திற்கு வந்த 60 நாட்களுக்குள் உங்கள் பாஸ்போர்ட்டில் அமீரக ரெசிடென்ஸ் விசாவை ஸ்டாம்ப் செய்தல் போன்ற அனைத்து பணியமர்த்தல் நடைமுறைகளையும் முடிப்பதற்கு பணியமர்த்தும் நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்.

ADVERTISEMENT

குறிப்பாக, இவையனைத்திற்கும் ஆகும் செலவுகளையும் முதலாளியே ஏற்க வேண்டும். அவ்வாறு ஒரு நிறுவனம் ஒரு பணியாளருக்கான பணி அனுமதியைப் பெறவில்லை என்றால், அவர்களுக்கு 50,000 திர்ஹம்களுக்குக் குறையாத அபராதமும் 200,000 திர்ஹம்களுக்கு மிகாமல் அபராதமும் விதிக்கப்படும்.

2. டிரான்ஸ்ஃபர் பணி அனுமதி:

இந்த அனுமதி வெளிநாட்டவர்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்ற அனுமதிக்கிறது. மாறும் நிறுவனம்  MOHRE ஆல் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ADVERTISEMENT

3. உறவினர் அனுமதியின் குடியிருப்பின் கீழ் பணி அனுமதி

இந்த அனுமதியானது குடும்ப உறுப்பினர் ஒருவரால் ஸ்பான்சர் செய்யப்படும் ரெசிடென்ஸ் விசா உள்ளவர்களுக்குப் பொருந்தும். இந்த பணி அனுமதிக்கு நிறுவனம் வெறுமனே விண்ணப்பிக்க மட்டும் வேண்டும். அவரின் ரெசிடன்ஸ் விசா நிறுவனத்தின் கீழ் இல்லாமல் ஸ்பான்ஷர் செய்த கணவர் அல்லது மனைவியின் கீழ் தொடரும்.

4. தற்காலிக வேலை அனுமதி:

அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டு தொழிலாளரை ஆறு மாதங்களுக்கு மிகாமல் குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்கு பணியமர்த்த வேண்டுமெனில், நிறுவனங்கள் இந்த தற்காலிக பணி அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.

5. ஒரு பணி அனுமதி (One-mission permit):

இந்த பணி அனுமதி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தற்காலிக வேலை அல்லது ஒரு குறிப்பிட்ட திட்டத்தை (project) முடிக்க வெளிநாட்டிலிருந்து ஒரு தொழிலாளியை நியமிக்க நிறுவனத்தை அனுமதிக்கிறது.

6. பகுதி நேர வேலை அனுமதி:

ஒரு ஊழியரின் வேலை நேரம் வாரந்தோறும் 20 மணிநேரத்திற்குக் குறையாமல் இருக்கும் பட்சத்தில், அவர் முதலாளி அல்லது வேறு யாருடைய அங்கீகாரமும் இல்லாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட முதலாளிகளுக்கு கீழ் வேலை செய்யலாம். எனவே, இந்த அனுமதி ஒரு ஊழியர் பகுதி நேர தொழிலாளர் ஒப்பந்தத்தின் கீழ் பணியாற்ற அனுமதிக்கிறது.

7. சிறார் பணி அனுமதி (Juvenile work permit)

இந்த பணி அனுமதி மூலம், 15 முதல் 18 வயது வரை உள்ள ஒருவர் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் வேலை பார்க்கலாம். குறிப்பாக, தனியார் துறை நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் பதின்ம வயதினருக்கு, அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் அளிக்க வேண்டும்.

மேலும், ஒரு நிறுவனம் சிறார் பணி அனுமதிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் பின்வரும்சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:

  • வயது முதிர்ந்த பணியாளருடன் ஒப்பிடும்போது ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஆறு மணிநேரமாக வேலை நேரம் குறைக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • அபாயகரமான அல்லது கடின உழைப்புக்கு சிறார்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது.

8. மாணவர் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அனுமதி:

இது 15 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அமீரக குடியிருப்பாளர் ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டு பயிற்சி பெற அனுமதிக்கிறது. இந்த அனுமதி பயிற்சி நோக்கங்களுக்காக தனியார் துறையில் சேர விரும்பும் மாணவர்களுக்கானது மற்றும் இந்த பயிற்சி அனுமதி மூன்று மாதங்களுக்கு நீடிக்கும். இதற்கும் சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

9. கோல்டன் விசா வேலை அனுமதி:

உங்களிடம் கோல்டன் விசா இருந்தாலும், நீங்கள் அமீரகத்தைத் தளமாகக் கொண்ட நிறுவனத்தில் பணிபுரிந்தால், உங்களுக்கு பணி அனுமதி தேவை. ஜூலை 1, 2021 அன்று, கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு குறிப்பிட்ட பணி அனுமதிகளை வழங்குவதற்கான தொடக்கத்தை MOHRE அறிவித்தது. அதன்படி, மூன்று சூழ்நிலைகளில் பணி அனுமதி வழங்கப்படுவதாக MOHRE தெரிவித்துள்ளது.

10. ஃப்ரீலான்ஸ் அனுமதி:

நீங்கள் எந்தவொரு நிறுவனத்திற்கும் கீழ் இல்லாமல், சுதந்திரமாக வேலை செய்ய விரும்பினால், தனிநபராகவே இந்த பணி அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.

MOHRE இன் படி, UAE யில் உள்ள ஒரு குறிப்பிட்ட முதலாளியின் ஸ்பான்சர்ஷிப் அல்லது சரியான வேலை ஒப்பந்தம் இல்லாமல் சுயதொழிலில் ஈடுபட விரும்பும் நபர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படுகிறது.

11. தனியார் ஆசிரியர் பணி அனுமதி

இந்த அனுமதியானது தகுதிவாய்ந்த வல்லுநர்களை தனிப்பட்ட கல்விப் பாடங்களை வழங்க அனுமதிக்கிறது. MOHRE இணையதளம் – mohre.gov.ae மூலம் இந்த அனுமதிக்கு நீங்கள் இலவசமாக விண்ணப்பிக்கலாம். பின்வரும் நபர்களில் எவரும் அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்:

  • அரசு அல்லது தனியார் பள்ளிகளில் பதிவுசெய்யப்பட்ட ஆசிரியர்கள்
  • அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள்
  • வேலையில்லாத நபர்கள்
  • 15 முதல் 18 வயது வரையிலான பள்ளி மாணவர்கள்
  • பல்கலைக்கழக மாணவர்கள்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel