ADVERTISEMENT

UAE: போலி கார் விற்பனை விளம்பரத்தை நம்பி 300,000 திர்ஹம்ஸை இழந்த நபர்..!! அதிரடி காட்டிய நீதிமன்றம்…

Published: 27 Jan 2025, 5:35 PM |
Updated: 27 Jan 2025, 5:40 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் ஒரு நபர் சமூக ஊடகங்களில் வெளியான போலி கார் விற்பனை விளம்பரத்தை நம்பி, காரை வாங்க 300,000 திர்ஹம்ஸ் பணத்தை இழந்திருக்கிறார். பின்னர் அந்த நபருக்கு ஆதரவாக அல் அய்ன் சிவில், வணிக மற்றும் நிர்வாக உரிமைகோரல் நீதிமன்றம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மோசடி செய்த நபர் விளம்பரத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட வாகனத்தை வழங்காமல், குடியிருப்பாளரிடம் 300,000 திர்ஹம்ஸை சட்டவிரோதமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நபர், வங்கிப் பரிமாற்றங்கள், வாய்ஸ் நோட்ஸ் மற்றும் வாட்ஸ்அப் மூலம் வந்த தகவல்தொடர்புகள் போன்ற சாட்சியங்களின் ஆதரவுடன் 300,000 திர்ஹம்ஸ் தொகையும், கூடுதலாக, முழுப் பணம் செலுத்தும் வரை 12 சதவீத வட்டியும், நிதி மற்றும் உணர்வுப்பூர்வமான சேதங்களுக்கு இழப்பீடாக 100,000 திர்ஹும்ஸ் தொகையும் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், வங்கி அறிக்கை, தொலைபேசி உரையாடல்கள் மற்றும் விளம்பரதாரருக்கு எதிரான குற்றவியல் நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்ட ஆதாரங்களை வழங்கி, வழக்கு தொடர்பான கட்டணம் மற்றும் செலவுகளையும் அவர் கோரியதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்நபரிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு மோசடி முறைகளைப் பயன்படுத்தியதற்காக ஒரு குற்றவியல் வழக்கில் மோசடி செய்தவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. மேலும், அந்நபர் கோரிய 300,000 திர்ஹம்ஸ் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் மோசடி செய்த நபர் நீதிமன்றத்தில் ஆஜராகவோ அல்லது வாதத்தை முன்வைக்கவோ தவறிய நிலையில், குற்றவியல் வழக்கின் தீர்ப்பு இறுதியானது மற்றும் உறுதியானது என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. கூடுதலாக, மோசடியால் ஏற்பட்ட நிதி மற்றும் உணர்ச்சிப் பாதிப்புக்கு இழப்பீடாக 100,000 திர்ஹம் வழங்குமாறு நபர் முன்வைத்த கோரிக்கைக்கு 50,000 திர்ஹம் இழப்பீடாக வழங்கவும் நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி ​​நீதிமன்ற கட்டணம் மற்றும் செலவுகளுடன் சேர்த்து மொத்தம் 350,000 திர்ஹம்களை செலுத்துமாறு மோசடி செய்தவருக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel