அபுதாபியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் மற்றும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் கனரக வாகனங்கள் மீதான புதிய கட்டுப்பாடுகள் கடந்த ஜனவரி 27 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அபுதாபி மொபிலிட்டி (AD mobility) திங்களன்று வெளியிட்ட அறிவிப்பில், புதிய கட்டுப்பாடுகளின் கீழ், சரக்கு லாரிகள், டேங்கர்கள் மற்றும் கட்டுமான உபகரணங்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் உட்பட கனரக வாகனங்கள் போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில் சாலைகளில் இயங்க தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட அறிவிப்பின் படி, திங்கள் முதல் வியாழன் வரை, காலை 6.30 மணி முதல் காலை 9 மணி வரையிலும், மீண்டும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் தடை அமலில் இருக்கும். மேலும், வெள்ளிக்கிழமைகளில், தடை அதே காலை நேரங்களுக்கு பொருந்தும், கூடுதல் கட்டுப்பாடு மதியம் 11 மணி முதல் மதியம் 1 மணி வரைஇருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த முயற்சி போக்குவரத்து அதிகமுள்ள இலகுவான வாகனங்களுடன் கனரக வாகனங்களின் மெதுவான இயக்கத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைகள் மற்றும் பாலங்கள் போன்ற உள்கட்டமைப்புகளை அதிக சுமைகளின் எடையால் ஏற்படும் சேதங்களில் இருந்து பாதுகாப்பதையும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்பொழுது, கனரக வாகன உரிமையாளர்கள் புதுப்பிக்கப்பட்ட நேரங்களை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக அபுதாபி காவல்துறையினருடன் நெருக்கமாக செயல்பட்டு வருவதாக அபுதாபி மொபிலிட்டி தெரிவித்துள்ளது.
இதேபோல், துபாயிலும் டிரக் இயக்கம் மீதான கட்டுப்பாடுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் ஜனவரி 1 முதல், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை மாலை நெரிசலான நேரங்களில் எமிரேட்ஸ் சாலையில் இருந்து லாரிகள் செல்ல தடை செய்யப்படுகின்றன. முக்கிய சாலைகளில் டிரக் இயக்க தடைகளை விரிவுபடுத்துவதற்கான சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த கட்டுப்பாடு அல் அவிர் ஸ்ட்ரீட்டிற்கும் ஷார்ஜாவுக்கும் இடையிலான தூரத்திற்கு போக்குவரத்தை மேம்படுத்த குறிவைக்கிறது.
ஷார்ஜாவும் இதே போன்ற நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது. ஜனவரி 1 முதல், மாலை 5:30 மணி முதல் இரவு 8 மணி வரை நெரிசலான மாலை நேரங்களில் எமிரேட்ஸ் டிரான்சிட் சாலையைப் பயன்படுத்துவதற்கு லாரிகள் தடைசெய்யப்பட்டுள்ளன, குறிப்பாக ஷார்ஜா நுழைவு மற்றும் இன்டர்செக்சன் எண் 7 க்கு இடையிலான பிரிவில் இது செயல்படுத்தப்பட்டுள்ளது.
எமிரேட்டுகளின் இந்த நடவடிக்கை போக்குவரத்து நெரிசலைத் தணிப்பதையும் பிராந்தியத்தில் உள்ள பயணிகளுக்கு மென்மையான பயண அனுபவத்தை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel