ADVERTISEMENT

அமீரகத்தில் இருந்து ஓமானுக்கு பஸ் மூலம் பயணிப்பது எப்படி? டிக்கெட் விலை, முன்பதிவு, பஸ் ரூட் மற்றும் நேர அட்டவணை உள்ளிட்ட முழுவிபரங்களும் உள்ளே..

Published: 5 Feb 2025, 7:18 PM |
Updated: 5 Feb 2025, 7:18 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஓமானில் உள்ள முசந்தம் பகுதிக்கு சுற்றுலா செல்ல விரும்புகிறீர்களா? அமீரகக் குடியிருப்பாளர்கள் அமீரகத்தில் இருந்து இயற்கை எழில் சூழ்ந்த முசந்தம் பகுதிக்கு மலிவான விலையில் பேருந்து மூலம் பயணிக்கலாம். கடந்த 2023 அக்டோபர் முதல் ராஸ் அல் கைமா போக்குவரத்து ஆணையத்தால் (RAKTA) முசந்தம் கவர்னரேட்டுக்கு இதற்காக பிரத்யேக பேருந்து சேவை இயக்கப்படுகிறது. இந்த பயணத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

ADVERTISEMENT

இந்த சேவையானது ராஸ் அல் கைமாவில் உள்ள அல் தைத் சவுத் (AlDhait South) பகுதியில் அமைந்துள்ள முக்கிய பேருந்து நிலையத்திலிருந்து முசந்தம் கவர்னரேட்டிற்குச் சொந்தமான காசாப் விலாயத்தில் (Wilayat of Khasab) முடிவடையும்.

ராஸ் அல் கைமா பஸ் நிறுத்தங்கள்:

• ராஸ் அல் கைமா பேருந்து நிலையம் (அல் தைத் சவுத்)
• அல் ராம்ஸ் பகுதி
• ஷாம் பகுதி

ADVERTISEMENT

முசந்தம் பஸ் நிறுத்தங்கள்:

• திபாத் பகுதி
• புக்கா விலாயத்
• ஹார்ஃப் பகுதி
• காதா பகுதி
• காசாபின் விலாயத்

  • பயண நேரம் தோராயமாக மூன்று மணி நேரம்
  • ஒரு வழி பயணத்திற்கு 50 திர்ஹம்ஸும், ஒரு சுற்று பயணத்திற்கு 100 திர்ஹம்ஸும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம்.
  • வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி மற்றும் மாலை 6 மணிக்கு பேருந்து சேவை இயங்கும்
  • RAKTA இன் அதிகாரப்பூர்வ இணையதளம், RAKBUS செயலி, பேருந்து அல்லது பேருந்து நிலையத்தில் உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்

டிக்கெட்டுகளை பின்வரும் நான்கு வழிகளில் முன்பதிவு செய்யலாம்:

1. RAK Bus ஆப், இது ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு கிடைக்கிறது
2. RAKBus வலைத்தளம் – rakbus.ae
3. பேருந்தில் நேரடியாக வாங்கலாம்.
4. ராஸ் அல் கைமா பேருந்து நிலையம்

ADVERTISEMENT

தேவையான ஆவணங்கள்

  • குறைந்தது ஆறு மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
  • குறைந்தது ஆறு மாதங்கள் செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடி
  • அமீரக குடியிருப்பாளர்கள் ஓமானுக்குள் நுழைவதற்கு, ஓமான் எல்லையில் விசா பெறலாம்.

RAKBus  இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எப்படி?

படி 1: பயண விவரங்களை உள்ளிடவும்

  • RAKBus வலைத்தளத்தை (rakbus.ae) பார்வையிடவும் மற்றும் உங்கள் புறப்படும் இடத்தை RAK – ‘அல் ஹம்ரா பஸ் நிலையம்’ மற்றும் ‘முசந்தம்’ எனத் தேர்ந்தெடுக்கவும்.
  • அதன் பிறகு, புறப்படும் மற்றும் திரும்பும் தேதியை உள்ளிடவும்.
  • இப்போது, பயணிகளின் எண்ணிக்கையைத் தேர்ந்தெடுத்து, ‘Find my Journey’ என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 2: நேரங்களைத் தேர்ந்தெடுக்கவும்

  • வெளிச்செல்லும் மற்றும் திரும்பும் பயணத்திற்கான நேரங்களைத் தேர்ந்தெடுத்து, ‘Continue’ என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 3: உங்கள் இருக்கையைத் தேர்ந்தெடுக்கவும்

RAKTA பேருந்தில் இலவசமாக உங்கள் இருக்கையைத் தேர்ந்தெடுக்கலாம். முதியவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் உள்ளன.

  • ‘Confirm’ பொத்தானைக் கிளிக் செய்து இரண்டு பயணங்களுக்கும் உங்கள் இருக்கைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  • பேருந்து பயணத்திற்கு இலவச வைஃபை சேர்க்க உங்களுக்கு விருப்பம் உள்ளது, இது ஒரு மணி நேரம் செல்லுபடியாகும்.
  •  ‘Continue’ என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 4: உங்கள் RAKTA அக்கவுண்ட்டில் உள்நுழைக

RAKTAவுடன் உங்களிடம் ஏற்கனவே அக்கவுண்ட் இல்லையென்றால் ‘Log In’ என்ற பிரிவின் கீழ் ‘Sign Up’  விருப்பத்தைக் கிளிக் செய்து, உங்கள் முழு பெயர், தேசியம், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், பாஸ்வேர்டை உருவாக்கி உங்கள் வயதினரைத் தேர்ந்தெடுக்கவும்.

படி5: பயணிகள் விவரங்களை உள்ளிடவும்

  • நீங்கள் ஒரு அக்கவுண்ட்டை உருவாக்கியதும், உங்கள் முழு பெயர், மொபைல் எண், வயது, பாலினம் மற்றும் தேசியம் ஆகியவற்றை உள்ளடக்கிய பயணிகள் விவரங்களை உள்ளிட வேண்டும்.
  • அடுத்தபடியாக, ‘Pay Now’ என்ற விருப்பத்தை கிளிக் செய்து, , உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி  ஆன்லைனில் டிக்கெட்டுகளுக்கு செலுத்த வேண்டியிருக்கும்.
  • ஆன்லைனில் டிக்கெட்டுகளுக்கு நீங்கள் பணம் செலுத்தியிருந்தால், உங்கள் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் டிஜிட்டல் டிக்கெட்டைப் பெறுவீர்கள்.

கட்டணம், விசா செலவுகள்

நாட்டை விட்டு வெளியேறும் குடியிருப்பாளர்கள் அமீரக எல்லையில், எக்ஸிட் கட்டணம் 36 திர்ஹம்ஸ் செலுத்த வேண்டும். ஓமான் எல்லையில் 50 திர்ஹம்ஸ் செலுத்தி ஓமான் விசாவைப் பெறலாம்.

சிங்கிள்-என்ட்ரி விசிட் விசா கொண்ட அமீரக சுற்றுலாப் பயணிகளுக்கு:

  • பயணத்திற்கு முன் ஓமான் விசிட் விசா பெற வேண்டும்
  • அமீரகத்திற்குத் திரும்புவதற்கு, ஓமானில் இருக்கும்போது விசா விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் மற்றும் திரும்பும் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் பெறப்பட வேண்டும்.

மல்ட்டிப்பிள் என்ட்ரி விசிட் விசாக்கள் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு:

  • புறப்படுவதற்கு முன் ஓமான் விசா தேவை.
  • இந்த விசா மூலம் நாட்டிற்குள் மீண்டும் நுழைவதை எளிதாக்கலாம். இருப்பினும், ஓமான் நாட்டுக்குள் நுழைவதற்கு அவர்களின் பாஸ்போர்ட் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாக வேண்டும்.

மற்ற எமிரேட்ஸிலிருந்து ராஸ் அல் கைமாவுக்கு எப்படி பயணம் செய்வது?

RAKTAவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான rakta.gov.ae அல்லது ‘RAKbus’ அப்ளிகேஷனில் டிக்கெட்டை முன்பதிவு செய்வதன் மூலம் RAKTA இன்டர்சிட்டி பஸ்ஸில் நீங்கள் பயணம் செய்யலாம்.

வலைத்தளத்தின் மூலம் முன்பதிவு செய்வதற்கான படிகள்:

1. rakta.gov.ae ஐப் பார்வையிட்டு, மெனுவிலிருந்து ‘services’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
2. ‘public transport’ என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் ‘intercity bus’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இப்போது, உங்கள் பயணத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விருப்பத்துடன், இன்டர்சிட்டி பயணத்திற்கான அனைத்து விருப்பங்களையும் வலைத்தளம் உங்களுக்கு வழங்கும்.
4. நீங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி கட்டணத்தை முடிக்கலாம்.
5. நீங்கள் டிக்கெட் கட்டணத்தின் இ-ரசீதைப் பெறுவீர்கள்.

இன்டர்சிட்டி பஸ் வழித்தடங்களுக்கு நிலையான கட்டணம் எதுவும் இல்லை, டிக்கெட்டுகளின் விலை செல்லக்கூடிய வழியைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel