ADVERTISEMENT

UAE: 2024ம் ஆண்டில் 6-மாத சம்பளத்தை ஊழியர்களுக்கு போனஸாக வழங்கிய துறைகள்… புதிய ஆய்வில் வெளியான தகவல்…

Published: 13 Feb 2025, 6:58 PM |
Updated: 13 Feb 2025, 6:59 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தைத் தளமாகக் கொண்ட ஆட்சேர்ப்பு மற்றும் மனிதவள ஆலோசனை நிறுவனமான கூப்பர் ஃபிட்ச் (Cooper Fitch) வெளியிட்டுள்ள புதிய ஆய்வில், அமீரகத்தில் தொழில்நுட்பம், வங்கி, சுகாதாரம் மற்றும் ஆலோசனை போன்ற உயர் வளர்ச்சித் துறைகளில் உள்ள ஊழியர்கள் 2024 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த போனஸைப் பெற்றதாகவும், குறிப்பிட்ட சில பிரிவினருக்கு ஆறு மாத சம்பளம் வரையிலான போனஸ் செலுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், நாட்டில் இப்போது போனஸ் என்பது குழு முயற்சிகளைக் காட்டிலும் தனிப்பட்ட செயல்திறனுடன் பிணைக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இது தனிப்பட்ட சாதனைகளுக்கு வெகுமதி அளிப்பதில் அதிகரித்து வரும் கவனத்தை பிரதிபலிக்கிறது. இது குறித்து வெளியான தரவுகளின் படி, 2024 ஆம் ஆண்டில், அமீரகத்தில் உள்ள நிறுவனங்களில் 72% நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஒன்று முதல் ஆறு மாதங்களுக்கு மேல் சம்பளம் வரை போனஸ் வழங்கியுள்ளன என்பது தெரிய வந்துள்ளது.

போனஸின் இந்த அதிகரிப்புக்கு நாட்டின் வேலை சந்தை போட்டித் தன்மை வாய்ந்ததாக இருப்பது காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது, பல தொழில் வல்லுநர்கள் சிறந்த வாய்ப்புகளுக்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருவதாலும், மேலும் புதிய நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டில் அமைக்கப்படுவதாலும் நாட்டில் மக்கள் தொகை மற்றும் வேலைகள் அதிகரிக்கிறது.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு, மிகவும் பொதுவான போனஸ் 1-2 மாத சம்பளம் ஆகும், ஏனெனில் 44% நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அதை வழங்கின. சுமார் 23% நிறுவனங்கள் 3–5 மாத சம்பளத்தையும்,  5 சதவீத நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்கும் மேலான சம்பளத்தையும் வழங்கியதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. முக்கியமாக வங்கி மற்றும் ஆலோசனைத் துறைகள் செயல்திறன் அடிப்படையிலான போனஸ்களை வழங்குகின்றன என கூறப்படுகின்றது. அதாவது, அவை தனிநபர் அல்லது நிறுவனத்தின் சாதனைகளின் அடிப்படையில் வழங்கப்படும் போனஸ் அல்லது கூடுதல் ஊதியங்களை பெரிதும் நம்பியுள்ளது.

இருப்பினும், விமான போக்குவரத்து, அரசு, ஊடகங்கள் மற்றும் சில்லறை விற்பனை போன்ற துறைகளில் 28% நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டில் போனஸை வழங்கவில்லை, இதற்கு பெரும்பாலும் பட்ஜெட் வரம்புகள், முன்னுரிமைகள் மாறும் அல்லது சந்தை நிச்சயமற்ற தன்மை காரணமாகும் என்று ஆய்வு கூறுகிறது. அதேசமயம், சில துறைகளில் வேலை சந்தை மேம்பட்டிருந்தாலும், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் போனஸைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

திறமைகளை ஈர்ப்பது மற்றும் தக்கவைத்துக்கொள்வதன் மூலம் செலவு அழுத்தங்களை சமப்படுத்த நிறுவனங்கள் தங்கள் போனஸ் உத்திகளை கவனமாக கட்டமைத்தாதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், 29% மூத்த நிர்வாகிகள் 3–5 மாத சம்பளம் வரையிலான போனஸைப் பெற்றனர் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், 26% மூத்த தலைவர்கள் போனஸ் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக, பொருளாதார மாற்றங்கள் மற்றும் கோல்டன் விசா மற்றும் விஷன் 2071 போன்ற அரசாங்க திட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் போனஸ் நடைமுறைகள் மாறிக்கொண்டிருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது, அவை திறமையான நிபுணர்களை ஈர்க்கவும், போட்டி வேலை சந்தையாக நாட்டின் நிலையை வலுப்படுத்தவும் உதவுகின்றன என்று கூப்பர் ஃபிட்சின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ட்ரெஃபர் மர்பி கூறியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel