துபாய் மெரினாவில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் இன்று (திங்கள் பிப்ரவரி 17, 2025) பிற்பகல் நேரத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. துபாய் மெரினா பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், மெட்ரோ நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள உயரமான கட்டிடத்தில் தீப்பிழம்புகள் ஏற்பட்டதாகவும், கட்டிடத்தின் உச்சியிலிருந்து கரும்புகை வெளியேறியதாகவும் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற அவசர சேவைகள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று கடந்த வாரம் துபாய் மெரினாவின் 81 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பெரும் தீவிபத்து நிகழ்ந்தது. தீவிபத்து நிகழ்ந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கட்டிடத்தில் இருந்து குடியிருப்பாளர்களை பத்திரமாக வெளியேற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் தற்பொழுது மற்றுமொரு தீவிபத்து சம்பவம் இன்று நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel