ADVERTISEMENT

குடியிருப்பாளர்கள் ரெசிடென்ஸி விசாவை எளிதாக புதுப்பிக்க புதிய தளத்தை அறிமுகம் செய்துள்ள துபாய்..!!

Published: 24 Feb 2025, 7:24 PM |
Updated: 24 Feb 2025, 7:24 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரக அரசானது குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் பல நவீன நொழில்நுட்பங்களை புகுத்துவதன் மூலம் செயல்முறையை எளிதாக்க பல உத்திகளை பயன்படுத்தி வருகின்றது. இதனால் சேவைகள் வழங்குவதற்கு எளிதாக மட்டுமல்லாமல் குடியிருப்பாளர்களுக்கு விரைவிலேயே சேவை பெறவும் வழிவகை செய்கிறது.

ADVERTISEMENT

அதில் தற்பொழுது துபாயில் உள்ள ரெசிடென்சி மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களின் பொது இயக்குநரகமானது (GDRFA) குடியிருப்பாளர்கள் தங்களின் விசாக்களை எளிதாக புதுப்பித்துக்கொள்ள புதியதொரு தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘Salama’ என்ற பெயரில் புதிய AI- இயங்கும் டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ள GDRFA, இதன் மூலம் குடியிருப்பாளர்கள் இப்போது தங்கள் விசாக்களை எளிதாக புதுப்பிக்க முடியும் என்று கூறியுள்ளது.

GDRFAவின் படி, புதிய தளம், காகிதப்பணி மற்றும் நீண்ட காத்திருப்பு நேரங்களின் தேவையை நீக்குவதன் மூலம், விசா புதுப்பித்தல் செயல்முறையை ஒரு சில நிமிடங்களில் முடிக்கவும், புதுப்பிக்கப்பட்ட ஆவணத்தை நேரடியாக பதிவிறக்கம் செய்யவும் குடியிருப்பாளர்களை அனுமதிக்கிறது.

ADVERTISEMENT

ஒரு பயனர் தளத்தில் உள்நுழைந்ததும், AI அமைப்பு பயனரின் விவரங்களை தானாகவே அங்கீகரிப்பு செய்வதுடன், அவர்களின் சார்புடைய விசாக்களின் நிலையைக் காட்டுகிறது, மேலும் காலாவதியாகுவதற்கு முன்னதாக இருக்கக்கூடிய விசா செல்லுபடியாகும் மீதமுள்ள நாட்களை எடுத்துக்காட்டுகிறது. இதில் விண்ணப்பதாரர் புதுப்பித்தல் காலத்தை தேர்வு செய்யலாம் என்றும், இதனைத் தொடர்ந்து கணினி உடனடியாக கோரிக்கையை செயலாக்குகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரு சில கிளிக்குகளில் குடும்ப உறுப்பினர்களுக்கான ரெசிடென்ஸி விசாக்களை புதுப்பிப்பதை சலாமா எளிதாக்குகிறது என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel