அமீரகத்தில் ரமலான் மாதம் மார்ச் 1 அன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மாதத்திற்கான நீட்டிக்கப்பட்ட பொது பார்க்கிங் நேரங்களை ஷார்ஜா சிட்டி முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ரமலான் காலத்தில் பொது பார்க்கிங் கட்டணம் தினமும் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், ரமலானை முன்னிட்டு பூங்காக்கள் செயல்படும் நேரத்தையும் மாற்றியமைத்துள்ளது. அதன்படி, குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் உள்ள பூங்காக்கள் தினமும் மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திறந்திருக்கும், அதே நேரத்தில் அல் சீயோ குடும்ப பூங்கா, அல் சீயோ லேடீஸ் பார்க், ஷார்ஜா தேசிய பூங்கா, மற்றும் அல் ரோலா பார்க் உள்ளிட்ட பூங்காக்கள் மாலை 4 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ரமலான் காலத்தில் உணவு நிறுவனங்களை கண்காணிக்கும் திட்டங்களையும் ஷார்ஜா சிட்டி முனிசிபாலிட்டி செயல்படுத்தியுள்ளது. 380 ஆய்வாளர்களைக் கொண்ட ஒரு குழு எதிர்மறை நடைமுறைகளை நிவர்த்தி செய்யவும், நகர தூய்மையை பராமரிக்கவும் எமிரேட் முழுவதும் உணவு விற்பனை நிலையங்களை மேற்பார்வையிடும் என்று கூறியுள்ளது.
கூடுதலாக, ரமலான் தொடர்பான நடவடிக்கைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ரமலானின் போது உணவைத் தயாரிப்பதற்கும் காண்பிப்பதற்கும் அனுமதி பெற உணவகங்கள் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டதுடன், நள்ளிரவுக்கு பின்னரும் வணிகங்கள் செயல்படுவதற்கான விண்ணப்பங்கள் எற்றுக்கொள்ளப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel