கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும், துபாய் சுங்கத்துறையால் 10.8 மில்லியன் போலி பொருட்களை உள்ளடக்கிய 54 பறிமுதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. துபாய் சுங்கத்துறையின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் போலியான பிராண்ட் தயாரிப்புகளால் ஏற்படும் இழப்புகளைக் குறைப்பதன் மூலம் துபாயின் முதலீட்டு சூழலையும் ஆதரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் விளைவாக துபாய் சுங்கத்துறை அதன் ஊழியர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும், போலி மற்றும் திருட்டுத்தனத்தை திறம்பட கண்டறிய மேம்பட்ட திறன்களை அவர்களுக்கு வழங்குவதிலும் கவனம் செலுத்துவதாகக் கூறப்படுகின்றது. மேலும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த புதுமையான ஆய்வு தொழில்நுட்பங்கள் மற்றும் ஸ்மார்ட் ஐடி பயன்பாடுகளால் இந்த முயற்சிகள் வலுப்படுத்தப்படுகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.
கூடுதலாக, துபாய் சுங்கத்துறையானது 3,273 பறிமுதல்களுடன், எல்லைப் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்தது என்றும், இதில் போதைப்பொருள் தொடர்பானவைகளில் 56% அதிகரிப்பு அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2024 ஆம் ஆண்டில் 84 முக்கிய திட்டங்களில் 55 ஐ இத்துறை நிறைவு செய்ததாகவும், இதன் விளைவாக சுங்கத்துறை கையாண்ட சரக்குகளில் 5% அதிகரிப்பு, 8% கூடுதலாக கையாளப்பட்ட பயணிகள் பைகள் போன்றவற்றில் அதிகரிப்பு ஏற்பட்டதாகவும் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
இது குறித்து துபாய் சுங்கத்துறையின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் அப்துல்லா புசெனாட் அவர்கள் பேசுகையில், D33 பொருளாதார நிகழ்ச்சி நிரலில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பொருளாதார இலக்குகளுடன் ஒத்துப்போகும் வகையில், துபாயில் வணிகத் துறை செழித்து வருவதாக எடுத்துரைத்துள்ளார்.
இவ்வாறு துபாயின் விரிவான உலகளாவிய நெட்வொர்க்கானது வெளிநாட்டு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு பங்களித்துள்ளது. கடந்த 2023 உடன் ஒப்பிடும்போது 2024 இல் கடல்வழி சரக்கு போக்குவரத்து 23%, தரைவழி சரக்கு போக்குவரத்து 21% மற்றும் விமான சரக்கு போக்குவரத்து 11.3% அதிகரித்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2024 நிலவரப்படி, சுங்கத் தரவுகளில் குறிப்பிடத்தக்க 49.2% வளர்ச்சியையும் சுங்கத்துறை பதிவு செய்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, துபாய் சுங்கம் பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளது, இதில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக ‘Platinum Classification’ குறியீட்டில் உலகளவில் முதலிடத்தைப் பிடித்தது உட்பட “Safe Cabinets from Harmful Radiation” மூலம் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு கண்டுபிடிப்புகளுக்கான “Big Idea of the Year” பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது போன்ற சாதனைகள் அடங்கும். கூடுதலாக, 2024 துபாய் அரசாங்க சிறப்புத் திட்ட விருதுகளின் உயரடுக்கு பிரிவில் துபாய் சுங்கம் தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel