ADVERTISEMENT

UAE: கடும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளுன்னு நடந்து செல்ல முழுமையாக AC வைத்த நடைபாதை… யாரெல்லாம் போயிருக்கீங்க..??

Published: 10 Mar 2025, 7:04 PM |
Updated: 10 Mar 2025, 7:56 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது குளிர்காலம் முடிந்து மெல்ல மெல்ல வெயில் வர ஆரம்பித்துள்ளது. அமீரகத்தை பொறுத்தவரை வெயில் காலம் என்றாலே அதிகளவு வெயிலின் தாக்கம் இருக்கும். இதனால் பெரும்பான மக்கள் வெயில் காலத்தின் போது வெளியில் செல்லவே விரும்புவதில்லை.

ADVERTISEMENT

இதனை கருத்தில் கொண்டு வெப்பமான காலநிலையில் மக்கள் குளிர்ச்சியாக நடந்து செல்ல உதவும் வகையில், அபுதாபி முதல் முழுமையாக குளிரூட்டப்பட்ட வெளிப்புற நடைபாதையை சமீபத்தில் திறந்துள்ளது. அல் மமூரா கட்டிடத்திற்கு அருகிலுள்ள அல் நஹ்யான் பகுதியில் அமைந்துள்ள இந்த நடைபாதையில் ஆண்டு முழுவதும் 24°C வெப்பநிலையை பராமரிக்கும் குளிரூட்டும் அமைப்பு உள்ளது.

இந்த வடிவமைப்பு உள்ளே குளிர்ந்த காற்றைப் பராமரிக்கும் அதே வேளையில் இயற்கையான சூரிய ஒளியை வடிகட்டி அனுமதிக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. அபுதாபியின் நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த நடைபாதை, சூரியன் சுட்டெரிக்கும் கோடைகாலத்தில் கூட குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கு இனிமையான நடைபயிற்சி அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

இதில் சில்லறை விற்பனைக் கடைகள், கஃபேக்கள் மற்றும் ஆண்டு முழுவதும் பயன்படுத்தக்கூடிய இருக்கை பகுதிகள் உள்ளன. மேலும், பாதசாரிகளுக்கு அமைதியான சூழலை உருவாக்கவும், நகர இரைச்சலில் இருந்து பயனர்களைப் பாதுகாக்கவும், நடைபாதையில் ஒலிப்புகா சுவர்களும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொது இடங்களில் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான அபுதாபியின் திட்டத்தின் இந்த திட்டம் முதல் படியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT