ஷார்ஜா எமிரேட்டானது கடந்த ஒரு சில வருடங்களாக சுற்றுலாவாசிகளையும் குடியிருப்பாளர்களையும் ஈர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ஷார்ஜாவின் முதலீட்டு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Shurooq), ஷார்ஜாவை சாகசம், கலாச்சாரம் மற்றும் ஆடம்பரத்திற்கான மையமாக மாற்றும் முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இதனடிப்படையில் இந்தாண்டு இறுதிக்குள் கோர் ஃபக்கானில் திறக்கப்படவிருக்கும் ‘Al Jabel Adventures’ என்ற புதிய சாகச பூங்காவில் ஜிப்லைன், ஊஞ்சல்கள், ஹைகிங் மற்றும் பைக்கிங் பாதைகள் இருக்கும் என்றும், இந்த பூங்கா, பிராந்தியம் முழுவதிலுமிருந்து சாகசம் செய்யும் நபர்களை ஈர்க்கும் என்றும் ஷூருக்கின் (shurooq) தலைமை நிர்வாகி கூறியுள்ளார்.
இந்த திட்டம் பல்வேறு வகையான ஈர்ப்புகள் மற்றும் ஆடம்பர விருந்தோம்பல் அனுபவங்களை உருவாக்குவதற்கான ஷுரூக்கின் பரந்த பார்வையின் ஒரு பகுதியாகும். இந்த ஆணையம் மூன் ரிட்ரீட் (Moon Retreat), அல் படேயர் ரிட்ரீட், நஜாத் அல் மெக்சார் (Najad Al Meqsar), அல் மஜாஸ் வாட்டர்ஃபிரண்ட் (Al Majaz Waterfront), அல் கஸ்பா (Al Qasba), மிலீஹா தேசிய பூங்கா (Mleiha National Park) மற்றும் அல் நூர் தீவு (Al Noor Island) போன்ற பல பிரபலமான திட்டங்களை ஷார்ஜாவில் ஏற்கனவே உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, போர்ட்ஃபோலியோவிற்குள் ஐந்து ஹோட்டல்களை இயக்கி வரும் ஷுரூக், ஆப்பிரிக்காவிற்கு வெளியே உலகின் மிகப்பெரிய சஃபாரி மற்றும் கோர் ஃபக்கனின் அழகிய மலைகளில் உள்ள தனித்துவமான சலுகைகள் உட்பட பல புதிய ஹோட்டல்களை திறப்பதன் மூலம் விரிவாக்கத்தை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மிலேஹாவில் நடைபெற்ற ஷார்ஜா ரமலான் மஜ்லிஸ் 2025 இன் போது பேசிய ஷுரூக்கின் தலைமை நிர்வாக அதிகாரி அகமது ஒபைத் அல் கசீர், ஹோட்டல் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதுடன் உயர்மட்ட அனுபவங்களை வழங்குவதில் ஷுரூக்கின் கவனம் உள்ளது என்றும், ஒவ்வொரு வளர்ச்சியும் சிறந்த தரம் மற்றும் மறக்க முடியாத அனுபவங்களை வழங்குவதை உறுதி செய்கிறது என்பதையும் எடுத்துரைத்துள்ளார்.
கூடுதலாக, ஷுரூக் ம்லீஹாவை ஒரு முக்கிய கலாச்சார மற்றும் சுற்றுலா தலமாக நிறுவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 200,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட மிலீஹாவின் வளமான தொல்பொருள் தளங்களும் மிலீஹா தேசிய பூங்காவும் பார்வையாளர்களை ஈர்க்கும் இடமாக மாறி வருகின்றன.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் சமூகம் இருவரையும் ஆதரிக்க புதிய கஃபேக்கள், கடைகள் மற்றும் உணவகங்கள் உருவாகி வருவதால், இப்பகுதி வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது, இது வரலாறு, கலாச்சாரம் மற்றும் நவீன வசதிகளின் சரியான கலவையாக அமைகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel