ADVERTISEMENT

துபாய்: ஏலத்தில் 35 மில்லியன் திர்ஹம்ஸிற்கு விற்பனையான வாகன நம்பர் ப்ளேட்!!

Published: 17 Mar 2025, 7:49 AM |
Updated: 17 Mar 2025, 7:51 AM |
Posted By: Menaka

துபாயில் வாகன எண்ணிற்காக நடைபெறும் ஏலமானது உலகளவில் பிரசித்தி பெற்றதாகும். குறிப்பிட்ட எண்களை வாங்குவதற்காக பல மில்லியன் திர்ஹம்ஸ் கணக்கில் விலை போவது இந்த ஏலத்தின் ஒரு சுவாரஸ்ய அம்சமாகும். அதே போல் சமீபத்தில் ‘Most Noble Number’ என்று துபாயில் ஏலம் நடத்தப்பட்டது. அந்த ஏலத்தில் DD5 என்ற நம்பர் ப்ளேட் சுமார் 35 மில்லியன் திர்ஹம்களுக்கு விற்பனையாகியுள்ளது.

ADVERTISEMENT

முகமது பின் ரஷீத் அல் மக்தூம் குளோபல் முன்முயற்சிகளுக்கு (MBRGI) நிதி திரட்டும் நோக்கில் புனித ரமலான் மாதத்தில் நடத்தப்பட்ட இந்த வருடாந்திர ஏலத்தில், 25 புகழ்பெற்ற மொபைல் எண்கள் மற்றும் வாகன எண் தகடுகளைப் பெறுவதற்காக ஏராளமான ஏலதாரர்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகின்றது.

DD5 என்ற எண் ஆரம்பத்தில் 15 மில்லியன் திர்ஹம் என்ற அடிப்படை விலையில் தொடங்கி, 20க்கும் மேற்பட்ட ஏலதாரர்கள் போட்டியிட்ட நிலையில், பிங்காட்டி ஹோல்டிங்கின் தலைவர் முகமது பிங்காட்டி, தனது ஏலக் குழு எண் 7 உடன் அதை வாங்கினார். அதேபோல் ஏலதாரர்களில் ஒருவரான 13 வயதே ஆன அப்துல்காதர் வாலித் அசாத் என்பவர், DD5 ஐ வாங்க போட்டியிட்டு தவறவிட்ட பின்னர், DD24 என்ற எண்ணை 6.3 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு வென்று அசத்தியுள்ளார்.

ADVERTISEMENT

13-year-old boy bids during the auction. Photo: Shihab

ஏற்பாட்டாளர்கள் மற்றும் கூட்டாளர்கள்:

  • துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA)
  • எடிசலாட் நிறுவனம் e& மற்றும் Du
  • எமிரேட்ஸ் ஏலம்

புர்ஜ் கலீஃபாவில் உள்ள அர்மானி ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மொத்தம் 83,677,000 திர்ஹம்ஸ் திரட்டியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் தந்தையர்களைக் கௌரவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட தந்தையர் அறக்கட்டளை பிரச்சாரத்தை (father’s endowment campaign) ஆதரிப்பதற்காக பயன்படுத்தப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

2023 ஆம் ஆண்டில், நடைபெற்ற இதே போன்றதொரு நிகழ்வில் ஒரு ஏலதாரர் P7 என்ற எண்ணை 55 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு விற்று உலக சாதனை படைத்தார். இது தற்பொழுது வரை உலகில் விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த எண் தகடுகளில் ஒன்றாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

மற்ற எண்கள்

நம்பர் ப்ளேட் விலை
DD5 35 மில்லியன் திர்ஹம்ஸ்
DD12 12.8 மில்லியன் திர்ஹம்ஸ்
DD77 12.6 மில்லியன் திர்ஹம்ஸ்
DD15 9.2 மில்லியன் திர்ஹம்ஸ்

மொபைல் எண் விற்பனை:

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), எடிசலாட் ஆகியவற்றுடன் e&, Du மற்றும் எமிரேட்ஸ் ஏலத்தால் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் மொபைல் எண்களும் விற்பனை செய்யப்பட்டது.

மிகவும் விலையுயர்ந்த தொலைபேசி எண்ணாக 058444444 என்ற எண் 1.7 மில்லியன் திர்ஹம்ஸ்க்கு விற்கப்பட்டது. இதனுடன் எடிசலாட் மற்றும் du இன் தலா 10 எண்கள் விற்கப்பட்டன. ஏலங்களின் போது, ​​RTA நம்பர் பிளேட் 75.9 மில்லியன் திர்ஹம் ஈட்டியது.

  • Etisalat எண்கள்: 4.732 மில்லியன் திர்ஹம்ஸ்
  • du எண்கள்: 3.045 மில்லியன் திர்ஹம்ஸ்

துபாயில் நடந்த நேரடி ஏலத்தைத் தவிர, Most Noble Number ஆன்லைன் தொண்டு ஏலம் நடந்து வருகின்றது. அபுதாபியில் நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையத்தால் (அபுதாபி மொபிலிட்டி) ஏற்பாடு செய்யப்பட்ட இது 444 சிறப்பு நம்பர் பிளேட்களைக் கொண்டுள்ளது மற்றும் மார்ச் 17 அன்று முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பாளர்கள் எமிரேட்ஸ் ஏல செயலி மூலம் அபுதாபியில் நடைபெறும் ஆன்லைன் தொண்டு ஏலத்தில் பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel