ADVERTISEMENT

ஈத் அல் ஃபித்ர் விடுமுறையை அல் அய்னில் கொண்டாட சிறப்பு ஃபெஸ்டிவலை அறிவித்த அபுதாபி..!!

Published: 24 Mar 2025, 2:32 PM |
Updated: 24 Mar 2025, 9:16 PM |
Posted By: Menaka

அபுதாபி கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை (DCT அபுதாபி), அல் அய்னின் ஈத் அல்-ஃபித்ர் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக முதன்முதலில் ‘கைதா அல் அய்ன் 2025’ விழாவைத் (Ghaitha Al Ain 2025 Festival) தொடங்கவுள்ளது. இந்த விழா, ஈத் பண்டிகையின் முதல் நாளிலிருந்து ஐந்து நாட்களுக்கு ADNEC அல் அய்னின் வெளிப்புறப் பகுதியில் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

DCTயின் படி, குடும்பங்களுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த விழா, அல் அய்னின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை நேரடி நிகழ்ச்சிகள், கலை நிறுவல்கள், விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகளுடன் காண்பிக்கும் என்று கூறப்படுகின்றது. மேலும், பார்வையாளர்கள் மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச சுவை விருப்பங்களுடன் பல்வேறு வகையான உணவு வகைகளையும் அனுபவிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழாவின் முக்கிய சிறப்பம்சங்கள்

  • ‘Echoes of Al Ain’: உணர்வுபூர்வமான அனுபவங்களுக்கான கலை நிறுவல் மண்டலங்கள் இடம்பெறும்.
  • Heritage Zone’: அல் அய்னின் கலாச்சார மரபுகளைக் காட்டும் நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள்.
  • ‘Art Oasis’: உள்ளூர் கலைஞர்களின் படைப்புகளைக் கொண்ட ஒரு கண்காட்சி இடம்.
  • ‘Competition Arena’: குதிரை சவாரி, ஜிப்-லைனிங் போன்ற பல சிலிர்ப்பூட்டும் செயல்பாடுகளை அனுபவிக்கலாம்.

Ghaitha Al Ain 2025 will offer a diverse range of entertainment activities for all ages, celebrating the community spirit that defines Eid.

ADVERTISEMENT

கூடுதலாக, நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பிரதான மேடையில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜெனரல் அட்மிசன், பெஸ்டிவல் டே பாஸ், பேமிலி பாஸ் மற்றும் அன்லிமிட்டட் அக்சஸ் பாஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் டிக்கெட்டுகள் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கைதா அல் ஐன் 2025, சமூக பிணைப்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட எமிராட்டி கலாச்சாரம் மற்றும் மதிப்புகளின் உணர்வை உள்ளடக்கிய ஒரு பொழுதுபோக்கு நிகழ்வு என ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர், இந்த விழா ஐக்கிய அரபு அமீரகம் முழுவதிலுமிருந்து குடும்பங்கள் மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel