துபாயை தளமாகக் கொண்ட ஸ்மார்ட் பார்க்கிங் நிறுவனமான பார்கோனிக் (Parkonic) விரிவாக்கத்தின் மூலம், துபாயில் உள்ள ஓட்டுநர்கள் விரைவில் பல புதிய இடங்களில் மிகவும் வசதியான, டிக்கெட் இல்லாத பார்க்கிங் வசதியை அனுபவிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. சாலிக் உடனான புதிய கூட்டாண்மை மூலம், அடுத்த வாரம் முதல் துபாய் முழுவதும் 18 புதிய இடங்களுக்கு அதன் தடையற்ற பார்க்கிங் அமைப்பை விரிவுபடுத்துவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய ஸ்மார்ட் பார்க்கிங் எங்கே வருகிறது?
புதிய ஸ்மார்ட் பார்க்கிங் வரக்கூடிய 18 பார்கோனிக் இடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
- யூனியன் கோ-ஆப் நாத் அல் ஹமர் (Union Coop Nad Al Hamar)
- ஹீரா பீச் (Heera Beach)
- பார்க் ஐலேண்ட்ஸ் (Park Islands)
- யூனியன் கோ-ஆப் அல் த்வார் (Union Coop Al Twar)
- யூனியன் கோ-ஆப் சிலிக்கான் ஒயாசிஸ் (Union Coop Silicon Oasis)
- யூனியன் கோ-ஆப் அல் கூஸ் (Union Coop Al Qouz)
- யூனியன் கோ-ஆப் அல் பர்ஷா (Union Coop Al Barsha)
- செட்ரே வில்லாஸ் கம்யூனிட்டி சென்டர் (Cedre Villas Community Centre)
- புர்ஜ் விஸ்தா (Burj Vista)
- அல் கஸ்பா (Al Qasba)
- யூனியன் கோ-ஆப் மன்கூல் (Union Coop Mankhool)
- லுலு அல் குசைஸ் (Lulu Al Qusais)
- மெரினா வாக் (Marina Walk)
- வெஸ்ட் பாம் பீச் (West Palm Beach)
- தி பீச் JBR (The Beach JBR)
- ஓபஸ் டவர் (Opus Tower)
- அஸூர் ரெசிடென்ஸ் (Azure Residence)
- யூனியன் கோ-ஆப் உம் சுகீம் (Union Coop Umm Suqeim)
பார்கோனிக் அப்ளிகேஷனை பயன்படுத்துவது எப்படி?
- பார்கோனிக் செயலியைப் பதிவிறக்கி ஒரு அக்கவுண்ட்டை உருவாக்கவும்.
- பின்னர், உங்கள் வாகனத்தின் நம்பர் பிளேட்டை (plate number) பதிவு செய்யவும்.
- இப்போது உங்கள் டிஜிட்டல் வாலட்டில் பணத்தைச் சேர்க்கவும்.
இது எப்படி வேலை செய்கிறது?
நீங்கள் எந்த பார்கோனிக் பார்க்கிங் பகுதிக்குள் நுழைந்ததும், இந்த அமைப்பு உங்கள் வாகனத்தை தானாகவே கண்டறியும். அந்த இடத்தில் பார்க்கிங் கட்டணங்கள் காட்டப்படுவதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் வெளியேறும்போது, கட்டணம் உங்கள் டிஜிட்டல் வாலட்டிலிருந்து தானாகக் கழிக்கப்படும். இதற்கு டிக்கெட்டுகள் பெறுவது அல்லது பேரியரில் (barrier) காத்திருப்பது போன்ற எதுவும் தேவையில்லை. மேலும், நீங்கள் விரும்பினால், வெளியேறுவதற்கு முன்பு பார்கோனிக் கட்டண நிலையத்தில் பணமாகவும் பார்க்கிங் கட்டணத்தை செலுத்தலாம்.
தற்போதைய பார்கோனிக் இடங்கள்
துபாய் ஹார்பர், மியூசியம் ஆப் தி ஃப்யூச்சர், குளோபல் வில்லேஜ் (பிரீமியம் பார்க்கிங்), சோஃபிடெல் டவுன்டவுன், தி கிரசண்ட் மற்றும் சென்ட்ரல் பார்க் போன்ற இடங்களில் பார்க்கிங் வசதிகளை பார்கோனிக் ஏற்கனவே நிர்வகிக்கிறது. இது அபுதாபி (WTC, ஷாம்ஸ் பொடிக், Arc டவர்), ஷார்ஜா (மெஜஸ்டிக் டவர்ஸ்) மற்றும் கோர்ஃபக்கன் (அல் சுஹப் ரெஸ்ட் ஹவுஸ்) ஆகிய எமிரேட்களிலும் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel