ADVERTISEMENT

துபாய்: முக்கிய பகுதியில் புதிய பாலத்தை திறந்த RTA!! பயண நேரம் 67% வரை குறையும் என தகவல்..!!

Published: 19 Apr 2025, 6:20 PM |
Updated: 19 Apr 2025, 6:20 PM |
Posted By: Menaka

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), ஜுமேரா ஸ்ட்ரீட்டை இன்ஃபினிட்டி பிரிட்ஜின் திசையில் அல் மினா ஸ்ட்ரீட்டுடன் இணைக்கும் ஒரு முக்கியமான புதிய பாலம் திறக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது. இது இப்பகுதியில் போக்குவரத்து ஓட்டத்தை எளிதாக்குவதில் ஆணையத்தின் குறிப்பிடத்தக்க செயலை குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

RTA வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இரண்டு பாதைகளுடன் 985 மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பாலம், மணிக்கு 3,200 வாகனங்களை கையாளும் திறன் கொண்டது. இந்த புதிய பாலம் அல் ஷிந்தகா காரிடார் மேம்பாட்டுத் திட்டத்தின் 4 ஆம் கட்டத்தின் ஒரு பகுதியாகும், இது ஷேக் ரஷீத் ரோடு மற்றும் ஷேக் கலீஃபா பின் சையத் ஸ்ட்ரீட் இன்டர்செக்சனிலிருந்து அல் மினா ஸ்ட்ரீட்டில் உள்ள ஃபால்கன் இன்டர்செக்சன் வரை மொத்தம் 4.8 கி.மீ நீளமானது.

The new bridge is marked in purple in this map provided by RTA

ADVERTISEMENT

RTA-வின் கூற்றுப்படி, புதிய இணைப்பு போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், வாகன ஓட்டிகளின் பயண நேரத்தை 12 நிமிடங்களிலிருந்து வெறும் 4 நிமிடங்கள் வரை அதாவது, 67% வரை குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், 4-வது கட்டத்தில் வரவிருக்கும் மேம்பாடுகளில் பின்வருவன அடங்கும்:

  • மொத்தம் 3.1 கிமீ நீளமுள்ள ஐந்து கூடுதல் பாலங்கள், ஒரு மணி நேரத்திற்கு 19,400 வாகனங்களை இணைக்கும் திறன் கொண்டவை
  • ஜுமேரா ஸ்ட்ரீட், அல் மினா ஸ்ட்ரீட் மற்றும் ஷேக் சபா அல்-அஹ்மத், அல்-ஜாபர் அல்-சபா ஸ்ட்ரீட் உள்ள முக்கிய ஜங்ஷன் மேம்படுத்தல்கள்
  • இரண்டு பாதசாரி பாலங்கள்: ஒன்று ஷேக் ரஷீத் சாலையில் மற்றும் அல் மினா ஸ்ட்ரீட்டில் மற்றொன்று

இவற்றுடன் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இன்ஃபினிட்டி பிரிட்ஜை அல் மினா ஸ்ட்ரீட் வழியாக அல் வாசல் ஸ்ட்ரீட்டுடன் இணைக்கும் 780 மீட்டர், மூன்று வழிப் பாலத்தை முடிக்க RTA திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பணிகள் முடிந்ததும், இது மணிக்கு 4,800 வாகனங்களை அனுமதிக்கும் என்றும், இது மத்திய துபாய் முழுவதும் போக்குவரத்தை மேலும் நெறிப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel