ADVERTISEMENT

துபாயில் 100க்கும் மேற்பட்ட கடைகளுடன் புதிதாக திறக்கப்பட்டுள்ள நாத் அல் ஷெபா மால்..!!

Published: 24 Apr 2025, 7:25 PM |
Updated: 24 Apr 2025, 7:30 PM |
Posted By: Menaka

ஆடம்பர ஷாப்பிங் அனுபவத்திற்கு புகழ்பெற்ற துபாயில் ஒரு புதிய ஷாப்பிங் மால் திறக்கப்பட்டுள்ளது. நாத் அல் ஷெபா மால் என்று அழைக்கப்படும் இந்த இடம் துபாய் ஹோல்டிங் அசெட் மேனேஜ்மென்ட் (DHAM) நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும். முன்னதாக வெளியான அறிக்கைகளின் படி, 500,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாலில் 100 க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கும் என்றும், அவை சில்லறை விற்பனை, உணவு, உடற்பயிற்சி, சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு விருப்பங்களை வழங்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இதனுடன் சேர்த்து, இது ரூஃப் டாப் ஜிம், நீச்சல் குளம் மற்றும் பேடல் கோர்ட்டுகள் போன்ற நவீன ஆரோக்கிய வசதிகளையும், எளிதாக அணுக 900க்கும் மேற்பட்ட பார்க்கிங் இடங்களையும் கொண்டுள்ளதாக DHAM தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ள இந்த மால், குடும்பங்கள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு வசதியாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. ஷாப்பிங் மற்றும் ஓய்வுக்கான இடத்தை உருவாக்க அதன் விசாலமான வடிவமைப்பில் உட்புற மற்றும் வெளிப்புற பகுதிகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து துபாய் ஹோல்டிங் அசெட் மேனேஜ்மென்ட்டின் நிர்வாக இயக்குனர் ஃபரீத் அப்தெல்ரஹ்மான் கூறுகையில், இந்த மால் துபாயின் விற்பனைத் துறையை வளர்ப்பதற்கும் சமூகத்தை ஆதரிப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சியின் ஒரு பகுதியாகும். நாத் அல் ஷெபா மால் நவீன வசதியை ஒரு சமூக உணர்வோடு இணைத்து வேகமாக வளர்ந்து வரும் பகுதியில் வணிகங்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகிறது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், துபாயின் முக்கிய மால்களில் ஒன்றான மால் ஆஃப் தி எமிரேட்ஸ் 5 பில்லியன் திர்ஹம் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதில் 100 புதிய கடைகள், அதிக சாப்பாட்டு வசதிகள், ஒரு புதிய தியேட்டர் போன்றவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel