துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), துபாய் மற்றும் ஷார்ஜா இடையே புதிய இன்டர்சிட்டி பேருந்து சேவையை வருகின்ற மே 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளது, மேலும் பயணிகளின் வசதி மற்றும் இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் தற்போதுள்ள பொது பேருந்து வழித்தடங்களில் பல புதுப்பிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த புதிய பேருந்து சேவையின் அறிவிப்பால் துபாய் மற்றும் ஷார்ஜாவாசிகள் பெரிதும் மகிழ்சியடைந்துள்ளனர்.
புதிய வழித்தடமான ரூட் E308 ஆனது, துபாயில் உள்ள ஸ்டேடியம் பஸ் நிலையத்திற்கும் ஷார்ஜாவில் உள்ள அல் ஜுபைல் பஸ் நிலையத்திற்கும் இடையில் சேவை செய்யும் என்றும், ஒரு வழிப் பயணத்திற்கு 12 திர்ஹம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு எமிரேட்டுகளுக்கு இடையேயான பொது போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்துவதற்கான RTAவின் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய இன்டர்சிட்டி பாதைக்கு கூடுதலாக, கவரேஜை மேம்படுத்தவும் மென்மையான பயணத்தை உறுதி செய்யவும் RTA ஒரே நாளில் ஏற்கனவே உள்ள பல வழித்தடங்களில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கிய புதுப்பிப்புகள் கீழே காணலாம்.
- ரூட் 17: இப்போது அல் சப்கா பஸ் நிலையத்திற்கு பதிலாக பனியாஸ் ஸ்கொயர் மெட்ரோ நிலையத்தில் முடிகிறது.
- ரூட் 24: அல் நஹ்தா 1 பகுதிக்குள் திருப்பி விடப்பட்டுள்ளது.
- ரூட் 44: அல் ரெபாட் ஸ்ட்ரீட் வழியாக துபாய் ஃபெஸ்டிவல் சிட்டிக்கு சேவை செய்ய சரிசெய்யப்பட்டது.
- ரூட் 56: DWC ஸ்டாஃப் வில்லேஜுக்கு நீட்டிக்கப்பட்டது.
- ரூட் 66 & 67: அல் ருவாயா ஃபார்மில் புதிய நிறுத்தம் சேர்க்கப்பட்டது.
- ரூட் 32C: அல் ஜாஃபிலியா மற்றும் அல் சத்வா இடையே சேவை குறைக்கப்பட்டுள்ளது, எனவே பயணிகள் வழித்தடம் F27 ஐப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- ரூட் C26: பேருந்து நிறுத்தம் மேக்ஸ் மெட்ரோ லேண்ட் சைட் பேருந்து நிறுத்தம் 2 க்கு மாற்றப்பட்டது.
- ரூட் E16: இப்போது யூனியன் பஸ் நிலையத்தில் முடிவடைகிறது.
- ரூட் F12: இப்போது குவைத் ஸ்ட்ரீட் வழியாக மீண்டும் திருப்பி விடப்பட்டது, அல் சத்வா ரவுண்டானாவைத் தவிர்த்து அல் வாசல் பார்க் பகுதிக்கு மாற்றப்பட்டது.
- ரூட் F27: நிறுத்தம் மேக்ஸ் மெட்ரோ லேண்ட் சைட் பேருந்து நிறுத்தம் 2 க்கு மாற்றப்பட்டது.
- ரூட் F47: ஜெபல் அலி இண்டஸ்ட்ரியல் ஏரியாவுக்குள் சரிசெய்யப்பட்டது.
- ரூட் F54: JAFZA சவுத் லேபர் கேம்ப்புக்கு நீட்டிக்கப்பட்டது.
- ரூட் X92: நிறுத்தம் மேக்ஸ் மெட்ரோ லேண்ட் சைடு பஸ் ஸ்டாப் 1க்கு மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து RTAவின் பொதுப் போக்குவரத்து நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குநர் அடெல் ஷகேரி பேசுகையில், பொதுப் போக்குவரத்து நெட்வொர்க்கை வலுப்படுத்துவதற்கும் மெட்ரோ, டிராம் மற்றும் கடல் அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கும் அதிகாரசபையின் உத்தியின் ஒரு பகுதியாக இந்த புதுப்பிப்புகள் உள்ளன என்று வலியுறுத்தியுள்ளார். அத்துடன் “துபாயில் பொது போக்குவரத்தை விருப்பமான பயண முறையாக மாற்றுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel