ADVERTISEMENT

UAE: ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. 22 வார சம்பள போனஸை அறிவித்த எமிரேட்ஸ் குழுமம்!!

Published: 8 May 2025, 6:17 PM |
Updated: 8 May 2025, 6:17 PM |
Posted By: Menaka

துபாயை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் குழுமம் 2024-25 ஆம் ஆண்டில் சிறப்பான நிதி செயல்திறனைத் தொடர்ந்து, அதன் ஊழியர்களுக்கு 22 வார சம்பள போனஸை அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட ஆறு மாத சம்பளத்திற்கு சமமான போனஸ், மே மாத சம்பளத்துடன் வழங்கப்படும் என்று வியாழக்கிழமை அதன் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம், மின்னஞ்சலில் ஊழியர்களை வாழ்த்தி, “2024-25 ஒரு நம்பமுடியாத ஆண்டாகும், இது எங்கள் நினைவில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் நிதி அறிக்கையுடன் முடிந்தது” என்று தெரிவித்துள்ளார்.

“உங்கள் அசாதாரண ஆர்வத்திற்காகவும், வணிகத்தில் சிறந்தவராக இருப்பதற்காகவும், எங்கள் சாதனை படைத்த நிதி முடிவுகளை வழங்குவதில் உங்கள் சிறந்த பங்கிற்காகவும், 22 வாரங்களின் இலாபப் பங்கை நான் அறிவிக்கிறேன், அதை உங்கள் மே மாத சம்பளத்துடன் நீங்கள் பெறுவீர்கள்” என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வலுவான செயல்திறனுக்காக ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்கும் பாரம்பரியம் இதுவாகும். கடந்த ஆண்டு, எமிரேட்ஸ் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு 20 வார போனஸை வழங்கியது, அதே போல் 2022-23 முடிவுகளுக்குப் பிறகு 24 வார போனஸ் வழங்கப்பட்டது.

போனஸுடன் கூடுதலாக, குழுமம் 2023 இல் சம்பளம் மற்றும் அலவன்ஸ் அதிகரிப்புகளை செயல்படுத்தியது, இதில் அடிப்படை ஊதியத்தில் 5% உயர்வு, மேம்பட்ட தங்குமிடம் மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகள் மற்றும் செப்டம்பர் மாதம் தொடங்கி கல்வி ஆதரவில் 10% உயர்வு ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel