ADVERTISEMENT

துபாய் டூட்டி ஃப்ரீ டிராவில் 1 மில்லியன் டாலரை வென்ற 250வது இந்தியர்..

Published: 16 May 2025, 5:38 PM |
Updated: 16 May 2025, 5:38 PM |
Posted By: Menaka

துபாய் டூட்டி ஃப்ரீ தனது புகழ்பெற்ற மில்லினியம் மில்லியனர் மற்றும் ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் ப்ரோமோஷன் மூலம் பல பங்கேற்பாளர்களின் வாழ்க்கை மாறியுள்ளது. அதில் இந்த முறை, ஒரு இந்தியர் சமீபத்திய டிராவில் $1 மில்லியன் பரிசை வென்றதன் மூலம் 250வது இந்திய மில்லியனர் என்ற பெயரை பெற்றுள்ளார். துபாயில் வசித்து வரும் 69 வயதான கேரளாவை சேர்ந்த டி.பி. மடத்தில் மோகன்தாஸ் (T.P Madathil Mohandas) என்ற அதிர்ஷ்டசாலி மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 501-ல் இந்த பரிசை வென்றுள்ளார்.

ADVERTISEMENT

இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான அவர், கடந்த 24 ஆண்டுகளாக டிக்கெட்டுகளை வாங்கி வரும் நிலையில், இறுதியாக ஏப்ரல் 28 அன்று டெர்மினல் 3 இல் வாங்கிய டிக்கெட் எண் 0310 உடன் வெற்றி பெற்றதாக தெரிவித்துள்ளார்.  துபாயில் கொள்முதல் மேலாளராக பணிபுரியும் அவர், துபாய் டூட்டி ஃப்ரீக்கு தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

முதன்முதலாக 1999 ஆம் ஆண்டு ப்ரோமோஷன் தொடங்கியதிலிருந்து மில்லியன் டாலர் பரிசை வென்ற 250வது இந்திய நாட்டவராக அவர் இப்போது மகுடம் சூட்டப்பட்டுள்ளார். இந்த ப்ரோமோஷன் வரலாற்றில் இந்திய நாட்டவர்கள் தான் அதிக டிக்கெட் வாங்குபவர்கள் மற்றும் வெற்றியாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்த டிராவில் நிர்வாக இயக்குனர் ரமேஷ் சிடாம்பி மற்றும் துணை நிர்வாக இயக்குனர் சலா தஹ்லக் உள்ளிட்ட துபாய் டியூட்டி ஃப்ரீ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்வின் போது, ​​மில்லினியம் மில்லியனர் சீரிஸ் 500இன் வெற்றியாளரும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார், வேணுகோபால் முல்லச்சேரி என்ற வெற்றியாளரும் இந்தியராவார். அஜ்மானில் வசிக்கும் முல்லச்சேரி, டிக்கெட் எண் 1163 உடன் $1 மில்லியனுக்கான காசோலையைப் பெற்றுக் கொண்டார். DDF டிராவில் மில்லியனர்களின் அறிவிப்புகளைத் தொடர்ந்து, ஃபைனஸ்ட் சர்ப்ரைஸ் டிராவில் பின்வரும் நான்கு அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு உயர் ரக வாகனங்களும் பரிசாக வழங்கப்பட்டது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT