துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), துபாய் மற்றும் ஷார்ஜா இடையே புதிய வழித்தடத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், நகரங்களுக்கு இடையேயான பயணம் இப்போது மிகவும் வசதியானதாகவும் பட்ஜெட்டுக்கு ஏற்றதாகவும் மாறியுள்ளது. RTA ஆனது, துபாயில் உள்ள ஸ்டேடியம் பஸ் நிலையத்தையும் ஷார்ஜாவில் உள்ள அல் ஜுபைல் பஸ் நிலையத்தையும் இணைக்கும் புதிய பேருந்து வழித்தடமான E308 ஐ சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஒரு பயணத்திற்கு 12 திர்ஹம்ஸ் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
முன்னதாக ஏப்ரல் மாத தொடக்கத்தில், புதிய வழித்தடத்தை மே மாதத்தில் தொடங்குவதாக RTA அறிவித்திருந்த நிலையில், இப்போது இந்த சேவை முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த புதிய பாதை, இரண்டு எமிரேட்களுக்கு இடையேயான தினசரி பயணத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் பயணம் செய்வதற்கு நம்பகமான மற்றும் மலிவான பயணத்தை வழங்குகிறது.
இது குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு அறிக்கையில்,
“Route E308 ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம் துபாய் மற்றும் ஷார்ஜா இடையேயான இணைப்பை RTA மேம்படுத்துகிறது… நகரங்களுக்கு இடையேயான பயணத்தை முன்னெப்போதையும் விட எளிதாகவும் மலிவாகவும் ஆக்குகிறது” என்று RTA கூறியுள்ளது.
இந்தப் புதிய வழித்தடம் UAE முழுவதும் பொது போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்தவும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் RTAவின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel