ADVERTISEMENT

RAK Weight Loss Challenge-2025: 45 கிலோ எடையைக் குறைத்து முதல் பரிசை வென்ற இந்தியர்!!

Published: 21 May 2025, 6:53 PM |
Updated: 21 May 2025, 7:24 PM |
Posted By: Menaka

துபாயில் வசிக்கும் 31 வயது இந்தியரான அம்ரித் ராஜ் ‘RAK Weight Loss Challenge 2025’ போட்டியில், குறிப்பிடத்தக்க வகையில் 45.7 கிலோ வரை எடையைக் குறைத்து 13,800 திர்ஹம் என்ற முதல் பரிசை வென்றுள்ளார். இந்த எடைக் குறைப்பு சாவலின் ஒட்டுமொத்த வெற்றியாளராக முடிசூட்டப்பட்ட ராஜ், ஒரு சில மாதங்களிலேயே அவர் 45.7 கிலோ எடையைக் குறைக்க வேண்டியிருந்தது. தனது தாயார் இந்தியாவில் டயாலிசிஸ் செய்து வருவதாகக் கூறிய ராஜ், அதிக எடையுடன் இருந்தபோதும் அவரது மனைவி அவரை திருமணம் செய்து கொண்டதால் இந்த எடை இழப்புப் பயணம் ‘மனைவிக்காக அர்ப்பணிக்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

பொதுவாக, எடைக் குறைப்பு பயணத்தின் போது நிறைய சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்றாலும், ராஜ் எதிர்கொண்ட சவால் வியப்பிற்குரியது. உணவுத் துறையில் பணிபுரிந்த போதிலும், ராஜ் தனது இலக்கில் கவனம் செலுத்தி, வெற்றி பெற்றுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “எடை இழப்பு என்பது மனநிலை மற்றும் கவனம் பற்றியது” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், துபாயில் வசிக்கும் பாகிஸ்தானிய வெளிநாட்டவரான முகமது யாகூப், 25 கிலோ எடையைக் குறைத்து பெண்கள் சாம்பியனாக உருவெடுத்திருக்கிறார். இந்த சவால் தனக்கு புதிய நோக்கத்தையும் சக்தியையும் அளித்ததாக அவர் கூறியுள்ளார். “இதற்கு முன்பு, நான் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். நான் வீட்டில் சிறிது உடற்பயிற்சி செய்வேன், ஆனால் RAK மருத்துவமனையிலிருந்து எனக்குக் கிடைத்த உந்துதல் என்னை முழுமையாக உடல் எடைகுறைப்பை செய்யத் தூண்டியது” என்று அவர் பகிர்ந்து கொண்டார்.

ADVERTISEMENT

இதனிடையே, ‘RAK Biggest Weight Loss Challenge 2025’ இன் குடும்பப் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்த நியாஸ் ஹம்சா பரப்பலத் மற்றும் அவரது குடும்பத்தினர், பகிரப்பட்ட வாட்ஸ்அப் குழுவில் தினசரி முன்னேற்றங்கள் உள்ளடக்கிய குழு முயற்சி குறித்துப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தாண்டு பதிப்பு

தற்போது ஐந்தாவது பதிப்பில், ராஸ் அல் கைமாவின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்துடன் (MOHAP) இணைந்து RAK மருத்துவமனை ஏற்பாடு செய்த இந்த நாடு தழுவிய முயற்சி, மருத்துவமனை வளாகத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் நிறைவடைந்தது. அங்கு வெற்றியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர், இதில் MOHAP ராஸ் அல் கைமாவின் பிரதிநிதி அலுவலக இயக்குநர் காலித் அப்துல்லா முகமது அல் ஷெஹி மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

இந்த போட்டியில் அமீர்கான் முழுவதிலுமிருந்து 24,289 பங்கேற்பாளர்களும், கிட்டத்தட்ட பாதி பேர் ராஸ் அல் கைமாவிலிருந்து மட்டும் பங்கேற்றதாகக் கூறப்படுகின்றது. 54% ஆண்கள் மற்றும் 46% பெண்கள் பங்கேற்ற இந்த சவால், தனிநபர்கள், குடும்பங்கள், பெருநிறுவன குழுக்கள் மற்றும் பள்ளி குழுக்களை ஈர்த்தது. நாடு முழுவதும் சுகாதார விழிப்புணர்வு தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், RAK எடை இழப்பு சவால் மாற்றம் மற்றும் உத்வேகத்திற்கான ஒரு சக்திவாய்ந்த தளமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel